உலகம் முழுவதுமே ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை குறித்தும் நொடிக்கு நொடி இந்த தொழில்நுட்பம் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் குறித்தும் தான் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் அந்த தொழிலில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் ஏஐ தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 40 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது . நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியான சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் ஏஐ பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி தற்போது இருக்கும் வேலை, பணியாளர்கள் மற்றும் வேலை சூழல்களை மாற்றி அமைத்துள்ளது என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. டெக் மற்றும் நுகர்வோர் சேவை துறைகளில் ஏஐ மனிதர்களுக்கு எப்படி ஆபத்துக்களை உண்டாக்கி இருக்கிறதோ அதே வேளையில் வாய்ப்புகளையும் உருவாக்கி தந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ தாக்கம் குறித்து உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு தீர்க்கமான திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
இந்தியாவின் பலமே அதன் மக்கள் தொகை தான் என நிதி ஆயோக்கின் அறிக்கை தெரிவிக்கிறது. 9 மில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ வல்லுநர்கள் , அதே வேளையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது என்றும் இவற்றை ஒழுங்குப்படுத்தி முறையாக செயல்படுத்தினால் இந்த ஏஐ தொழில்நுட்பம் நமக்கு பல வாய்ப்புகளை உண்டாக்கி தரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏஐ மனிதர்கள் வேலையை பறிக்கிறது என்பது உண்மைதான் ஆனால் இதில் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக தேசிய ஏஐ மிஷன் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் ஏஐ பிரிவில் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக கல்வியில் ஏஐ கல்வியை புகுத்துவது, தேசிய அளவிலான ஒரு திறன் மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வருவது, ஏஐ வருகைக்கு ஏற்ற வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகிய மூன்றையும் மேற்கொள்ளும் போது இந்தியாவிற்கு இந்த பிரிவில் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications