இனி வர்றது ரொம்ப டஃப்பான காலம்! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! ஸ்ரீதர் வேம்பு சொல்வதை கேட்டீங்களா?

உலகில் ஏராளமான பிரச்சனைகள் மக்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, பணி நீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவை ஒரு புறம் பலரையும் சிக்கலுக்கு ஆட்படுத்த தான் செய்கிறது. இந்நிலையில் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இனி வரவிருக்கும் கடினமான நாட்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்! என்று கூறியுள்ளார்.

என்ன சொன்னார் ஸ்ரீதர் வேம்பு?: IT நிறுவனங்களில் பணிநீக்கங்கள் தொடர்ந்து நடப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு அந்நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தையே காரணமாக கூறி வருகிறது. இப்படி இருக்கையில் ஸ்ரீதர் வேம்பு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் மட்டும் IT நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஒரு போஸ்டையும் பகிர்ந்திருக்கிறார்.

தனது X பக்கத்தில் ஸ்ரீதர் வேம்பு, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணியில் இருக்கும் நாடு அமெரிக்கா. ஆனால் அங்குள்ள மக்களே இந்த AI தொழில்நுட்பத்தை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். படிக்கும் கல்லூரி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை AI தொழில்நுட்பத்தை வில்லனாகவே பார்க்கின்றனர். இன்றெல்லாம் IT நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துவிட்டு, அதற்கு ஆர்டிவிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை மட்டும் காரணம் காட்டுகின்றன. ஆனால் உண்மையிலேயே அந்தந்த நிறுவனங்கள் பொருளாதார சிக்கலில் தான் பணிநீக்கம் செய்கின்றன. தங்களுடைய நிறுவனத்தை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதாகக் காட்டிக் கொள்ள இப்படி எல்லாம் சாக்கு போக்கு சொல்கின்றன. உண்மையிலேயே நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க AI-ஐ காரணம் காட்டுகின்றன. ஜோகோ நிறுவனமும் இதே சூழ்நிலையை எதிர்கொண்டு தான் வருகிறது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.

இனி வர்றது ரொம்ப டஃப்பான காலம்! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! ஸ்ரீதர் வேம்பு சொல்வதை கேட்டீங்களா?

உலக பொருளாதாரம் மட்டுமல்ல அரசியலும் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இதற்கான அறிகுறிகள் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் போதே மெல்ல மெல்ல தெரிய தொடங்கி விட்டது. தற்போது ஏஐ துறையில் செய்யப்படும் முதலீடுகள் தற்காலிகமாக பொருளாதாரத்தை தாங்கி கொடுத்தாலும், இறுதி வரையில் அவை நிலைக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய கணிப்புகளில் தவறு இருந்தால் கமெண்ட் செக்ஷனில் கூறுமாறும் கூறி இருந்தார். அதற்கு ஒரு பயனர் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று உள் மனதில் ஏற்படும் உணர்வை மட்டுமே நம்பி சொல்லக்கூடாது. அதற்கு பின்னால் உண்மையிலேயே பொருளாதார தரவுகள் மற்றும் ஆய்வுகள் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மற்றொரு நபரோ நிறுவனங்கள் தங்களுடைய நஷ்டத்தை மறைத்துவிட்டு எப்போதும் AI-ஐ காரணம் காட்டிக்கொண்டு இருந்தால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையே போய்விடும் என்று கவலை தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+