உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் செயற்கை நுண்ணறிவு உடன் தற்போது மெஷின் லேர்னிங் சேர்ந்து மக்களுக்கு இணையாக புது புது விஷயங்களை கற்றுக்கொண்டு அனைத்து விதமான வேலைகளையும் செய்ய தயாராகி வருகிறது. ChatGPT அறிமுகத்திற்கு பின் டிஜிட்டல் சேவை பிரிவுகளில் தான் அதிகளவிலான AI சேவைகள் புகுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது GPT-4 தொழில்நுட்பத்தின் திறனை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மெஷின் லேர்னிங் உடன் இணைக்கப்பட்டு பல முக்கிய மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று தான் கடந்த சில நாட்களாக AI வல்லுனர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் AI chef.

அது என்ன AI chef என்று தானே கேட்குறீங்க..? வாங்க சொல்றேன். உலகளவில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் இன்ஜினியரிங் துறையின் ஆராய்ச்சியாளர்கள் Chef என பெயரிடப்பட்டு உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ப்ரோகிராம் செய்யப்பட்ட ரோபோ, ஒரு செய்முறை வீடியோ-வை பார்த்து கற்றுக்கொண்டு தனது சொந்த மெமிரியில் அதை சேமித்து ப்ராசஸ் செய்து மறுபடியும் செய்கிறது.

Instructional video வாயிலாக சேலெட் செய்வதை எப்படி என கற்றுக்கொண்ட Chef என பெயரிடப்பட்ட ரோபோ, செய்முறையை தானாக கற்றுக்கொண்டு தன்னிடம் இருக்கும் கருவிகளை வைத்து காய்கறியை நறுக்கியது. இந்த வீடியோ சிம்பிள் ஆக இருந்தாலும் இதற்கு பின்னால் இயங்கும் தொழில்நுட்பம் மனிதர்களின் தேவை முற்றிலும் நீக்க கூடியவையாக உள்ளது.
சமீபத்தில் 3டி பிரின்டிங் கேக் கூட தயாரிக்கப்பட்டது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் அடுத்த சில வருடத்தில் பெரிய பெரிய ஹோட்டலில் ROBOT CHEF வந்தால் கூட வியக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே உற்பத்தி துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் தற்போது கிரியேட்டிவ் துறையிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் ரோபோ ஆதிக்கத்தின் பாதை துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications