அமெரிக்கா: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கான காலகட்டம் இது. எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சு தான் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் நமது வேலைகளை எளிதாக்குவது எப்படி, நாம் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது எப்படி என பல்வேறு கண்டுபிடிப்புகளும் தினம் தினம் வெளி வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான சிப்கள். இத்தகைய சிப்களுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் பெருமளவில் லாபம் அடைந்துள்ளது.

என்விடியா (Nvidia) அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான சிப்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது உலக அளவில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்ததாக அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக என்விடியா கார்ப்பரேஷன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியை விட பத்து மடங்கு அதிக மதிப்பு கொண்ட நிறுவனம் என்விடியா கார்ப்பரேஷன்.
என்விடியாவின் இந்த வெற்றிக்கு காரணமாக இருப்பவர் அதன் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹூவாங். தைவான் நாட்டை சேர்ந்த ஜென்சன் தன்னுடைய 5ஆவது வயதில் தாய்லாந்துக்கு குடி பெயர்ந்தார்.
9ஆவது வயதில் தன்னுடைய உறவினர்களுடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஒரிகான் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த அவர் 1992 ஆம் ஆண்டு ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் மேற்படிப்பை முடித்தார்.
1993 ஆம் ஆண்டு 3டி கேமிங்களுக்கான graphics processing unit-களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தை தொடங்கினார். பல ஆண்டுகளாக என்விடியா நிறுவனம் கேமிங் கருவிகளுக்கான சிப்களை மட்டுமே தயாரித்து வந்தது.
அண்மையில் இது ஏஐ சிப்களை தயாரிக்கும் தொழிலில் இறங்கியது. ஆனால் இதுதான் அந்த நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை பெற்று தந்துள்ளது.
தற்போது என்விடியா நிறுவனம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் அதை சார்ந்த சிப்களின் தயாரிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதன் தலைமை செயல் அதிகாரியான ஜென்சனின் சொத்து மதிப்பும் படிப்படியாக உயர்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு சிப்களுக்கான தேவைகள் அதிகரித்து இருப்பதால் என்விடியா நிறுவனம் முதல் காலாண்டில் தாங்கள் கணித்ததை விட அதிக வருவாய் ஈட்டி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக இந்நிறுவனத்தின் வருவாய் 200 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.
இந்த நிறுவனத்தில் ஜென்சென் 86.76 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார். தற்போது இதன் ஒரு பங்கின் மதிப்பு 1,068 டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அப்படி என்றால் இவரை வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு பல லட்சம் கோடிகளாக உள்ளது. எனவே அண்மையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் 91.3 பில்லியன் டாலர்களுடன் ஜென்சென் 17ஆவது இடத்தை பிடித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications