செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு துறைகளிலும் வேலை செய்யும் விதமே மாற்றம் அடைந்து வருகிறது. ஒரே மாதிரியாக திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகளில் எல்லாம் மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் ஈடுபடுத்துகின்றன.
கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் கோடிங் வேலைகளை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலமே நிறைவேற்றுவதாக கூறுகின்றன. தற்போது அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளாக மாறி வரக்கூடிய சூழலில் இது மனிதர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற ஒன்றே இருக்காது என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் ஏஐ தொழில்நுட்பங்கள் செயல்திறனையும், உற்பத்தி திறனையும் உறுதிப்படுத்துகின்றன என்பதால் நிறுவனங்கள் அவற்றை நாடவே விரும்புகின்றன. இதனால் ஏற்கனவே ஊழியர்கள் பணிநீக்கம் என்பது தொடங்கிவிட்டது.
கடந்த மாதம் வர்த்தக மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக முழுவதும் 40 சதவீத வேலை வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தது. மெக்கன்சி மற்றும் நிறுவனங்கள் சார்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு வேலைகளும் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கு முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன இதன் காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் 400 இருந்து 800 மில்லியன் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என தெரிவித்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக உலக அளவில் 375 மில்லியன் ஊழியர்கள் அதாவது 14 சதவீத ஊழியர்கள் புதிதாக ஒரு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்கனவே 14 சதவீத ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கத்தை உணர தொடங்கியுள்ளனர் என மற்றொரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் 1980க்கு பிறகு பணியாளர்கள் பலருக்கும் அவர்களின் ஊதியம் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் ஏஐ தான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்பட்டிருக்கும் ஆட்டோமேஷனே ஊழியர்கள் குறைப்புக்கும் சம்பள குறைப்புக்கும் காரணமாகும்.
மைக்ரோசாப்ட் வொர்க் ட்ரெண்ட் இன்டெக்ஸ் 2023 இந்தியாவை சேர்ந்த 74 சதவீத ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தங்களுடைய வேலை வாய்ப்பை பறித்து விடும் என்ற அச்சத்தில் இருப்பதாக கூறுகிறது. இதனிடைய ஐநா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் பெருமளவிலான பணி இழப்புகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
எனவே வேலை வாய்ப்பு போய்விடும் என அச்சப்படாமல் ஊழியர்கள் புது தொழில்நுட்பங்கள் குறித்த தங்களின் திறன்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications