ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பிரிட்டனில் மூன்று மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு பெருமளவில் தற்போது ஏஐ கருவிகளை சார்ந்து இருக்கத் தொடங்கி விட்டன. இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் பிரிட்டனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 3 மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனக் கூறியுள்ளது. அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனிபிளேர் இன்ஸ்டியூட் சார்பாக ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 2,75,000 வரையிலான வேலை வாய்ப்புகள் பறி போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதர்கள் செய்து வரக்கூடிய இந்த வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும் வேலைகளாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் என தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட உச்சநிலையை அடைந்த பிறகு இந்த நிலைமை மாறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்பதால் இளைஞர்கள் அதற்காக தயாராக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதன் மூலம் முதலில் மேலாண்மை மற்றும் கிளர்க் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணிகள், பேங்கிங் மற்றும் பைனான்ஸ் தொடர்பான வேலைகள் அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாறும் எனவும், இதனால் பெரிய அளவில் மனிதர்களின் வேலை மிச்சமாகும் என்றும் அதில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை வேலைகளை பறிக்கத்தான் போகிறது, ஆனால் அதற்கு மாற்றாக வேலைகள் உருவாகும் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சமாகும். ஒரே மாதிரியான வேலைகள் ஏஐ நுட்பத்தோடு இணைக்கப்பட்டு விடும், அதற்கு மனிதர்கள் தேவைப்படாது, ஆனால் சிக்கலான நடைமுறைகளை கொண்ட வேலைகள் தொடர்ந்து மனிதர்களால் தான் சாத்தியப்படும் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
Written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications