இன்னும் 18 மாசத்துல பெரும்பாலான வேலைகளை ஏஐ காலி செய்யும்..!! மனித குலத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை..!!

தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் உலகளவில் பேசப்படும் ஒரு விஷயம். இந்த தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அதே வேளையில் பலரது வேலைக்கும் ஆப்பு வைத்து வருகிறது.

உலக அளவில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து வருகிறது ஏஐ. பல்வேறு நிறுவனங்களில் நுழைவு நிலை வேலைகள் ,திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகள் ,கோடிங், ஹெச் ஆர் உள்ளிட்டவை அனைத்தும் ஏஐ வசம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது ஒயிட் காலர் எனப்படும் அலுவலகத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய வேலைகள் தான்.

இன்னும் 18 மாசத்துல பெரும்பாலான வேலைகளை ஏஐ காலி செய்யும்!! மனித குலத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை!!

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ பிரிவுக்கான தலைவராக செயல்படும் முஸ்தபா சுலைமான் அடுத்த 18 மாதங்களில் பெரும்பாலான வேலைகளை ஏஐ எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார். அடுத்த12 முதல் 18 மாதங்கள் தான் அனைவருக்கும் இருக்கக்கூடிய காலக்கெடு எனக் கூறுகிறார். பெரும்பாலான ஏஐ மாடல்கள் மனிதர்களுக்கு நிகராகவும் மனிதர்கள் விட இன்னும் திறமையாகவும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டன எனக் கூறுகிறார்.

எனவே ஒட்டுமொத்தமாகவே இந்த உலகம் முழுவதுமே அடுத்த ஓராண்டிலிருந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புத் துறையில் மாற்றத்தை காண்பார்கள் என தெரிவித்திருக்கிறார். பல்வேறு வேலைகள் தானியங்கி முறைக்கு மாற்றப்படும் என கூறும் அவர் கணினி முன்பு அமர்ந்து பார்க்கும் வேலைகள் மனிதர்களுக்கு இனி இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். மார்க்கெட்டிங் , லீகல் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட வேலைகள் அடுத்தடுத்து ஏஐ வசம் செல்லும் எனக் கூறியிருக்கிறார்.

கணினிகளின் திறன்கள் ஒவ்வொரு நொடியும் மேம்பட்டு வருகின்றன என கூறும் அவர் நிறுவனங்களும் இனி ஏஐ மாடல்களுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள் என தெரிவிக்கிறார். தற்போதைக்கு தொடக்க நிலையில் இருக்கக்கூடிய வேலைகள் தான் பறிபோகின்றன என நாம் பார்க்கிறோம் ஆனால் கூடிய விரைவில் சீனியர் லெவல் வேலைகளுக்கும் ஆள் தேவைப்படாது என்கிறார்.

மெடா, அமேசான், கூகுள் என உலகின் முன்னனி டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ளன. இதனை காரணமாக கூறியும் மனிதர்களை நீக்கி அந்த சம்பளத்தை கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. எனவே ஏஐ நுட்பத்தில் திறமையை வளர்த்து கொள்வது தான் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை தக்க வைக்க உதவும். ப்ளூ காலர் வேலைகளுக்கு தற்போதைக்கு ஏஐ இடம் இருந்து ஆபத்து இல்லை. அதாவது மெக்கானிக், பிளம்பர் போன்ற வேலைகளுக்கு ஏஐ மூலம் சிக்கலே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+