சுவிஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பின் (WEF) வருடாந்திர கூட்டத்தில் உலகின் பல அரசியல் தலைவர்கள், நிறுவனங்களின் சிஇஓ முக்கிய கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசி வருகின்றனர். இன்று அதிபர் டிரம்ப் கூட டவோஸ்-ல் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் பேச உள்ளார்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஏஐ தொடர்பான கூட்டத்தில் பேசிய அன்த்ரோபிக் நிறுவனத்தின் CEO டாரியோ அமோடெய் ஐடி ஊழியர்களுக்கும், சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கும் செய்யும் பெரும்பாலான அல்லது அனைத்து வேலைகளையும் ஆட்டோமேட் செய்யும் நிலைக்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.
எகனாமிஸ்ட் பத்திரிக்கை ஆசிரியர் ஜானி மின்டன் பெடோஸ் மற்றும் கூகுள் டீப்மைண்ட் CEO டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலில் அமோடேய் பேசுகையில் "எனது நிறுவனத்தில் உள்ள சில இன்ஜினியர்கள் இப்போது கோடிங் செய்வதில்லை. கோடிங்-ஐ ஏஐ மாடல் எழுதுகிறது, அதை ஊழியர்கள் வெறுமென திருத்துகின்றனர். டெக் ஊழியர்களின் 90 சதவீத வேலை இப்போது ஏஐ உருவாகும் கோடிங்-ஐ சரி செய்வதும், அதைச் சுற்றியுள்ள வேலைகளை பார்ப்பது மட்டுமே செய்கிறார்கள்." என தெரிவித்தார்.
மேலும் இந்த மாற்றம் வேகமாக நிகழும் என்று அவர் கணிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் செயல்முறையின் முழு வேலைகளையும் AI மூலம் தானியங்கு செய்யும் நிலைக்கு வருவதற்கு 6-12 மாதங்கள் மட்டுமே ஆகும் எனவும் அவர் கணித்துள்ளார்.
இருப்பினும், சிப் உற்பத்தி மற்றும் ஏஐ மாடல் பயிற்சி அளிப்பது போன்ற சில பகுதிகள் இன்னும் AI-யால் முழுமையாக செய்ய முடியாதவை என்பதையும் அன்த்ரோபிக் நிறுவனத்தின் CEO டாரியோ அமோடெய் ஒப்புக்கொண்டார்.
அன்த்ரோபிக் CEO டாரியோ-வின் இந்த கணிப்பும், எதிர்பார்ப்பும் ஐடி துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ மூலம் சாப்ட்வேர் இன்ஜியர்களை பணியில் சேர்ப்பது தற்போது பெரிய அளவில் குறைந்துள்ள வேளையில், டாரியோ சொன்னது போல் நடந்தால் ஒட்டுமொத்த டெக் துறைக்கும் இது ஆபத்தாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே நேரம், AI புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
டாரியோவின் கணிப்பு இளம் பொறியாளர்கள் மற்றும் ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு முக்கியமானதாக உள்ளது. AI தொழில்நுட்பத்தை தொடர்ந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications