ஆபத்து உச்சக்கட்டம்.. ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட பெரிய தலைகள்! 3 பேரும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.. ஏன்?

செயற்கை நுண்ணறிவு இந்த நூற்றாண்டின் ஆகசிறந்த தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கும் இதேவேளையில் எண்ணிலடங்கா ஆபத்தும் இதில் உள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை முதல் முறையாக ஓப்பன்ஏஐ, கூகுள் ஆகியவை அறிமுகம் செய்யும் போது புகைப்பட உருவாக்கத்தில் பல்வேறு இன, நிற பாகுப்பாடுகளை ஏஐ மாடல்களை காட்டியத அனைவருக்கும் நினைவிருக்கும், இது பெரிய பிரச்சனையாகவும் வெடித்தது.

ஆபத்து உச்சக்கட்டம்.. ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட பெரிய தலைகள்! 3 பேரும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.. ஏன்?

இதை தொடர்ந்து ஏஐ மாடல்களை உருவாக்கிய நிறுவனங்களும் இதை முறையாக ஆய்வு செய்து தவறுகளை சரி செய்ய துவங்கியது, அதன் பின் அடுத்தடுத்து முன்னேற்றம், வளர்ச்சி, மேம்பாடு என AGI நிலைக்கு கடந்த 2-3 வருடத்தில் ஏஐ வளர்ச்சி அடைந்து நிற்கிறது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு ஏற்றார் போல் பிரச்சனையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போதையை மேம்பட்ட ஏஐ மாடல்கள் சைபர் தாக்குதலை உருவாக்குவதை தாண்டி ஆயுதங்கள் குறிப்பாக பயோ ஆயுதங்களை தயாரிக்கும் அளவுக்கு தவறாக பயன்படுத்த துவங்கியுள்ளது.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த ஆந்திரோபிக் நிறுவனத்தின் தலைவரான டாரியோ அமோடேய் ஏஐ தொழில்நுட்ப துறை மொத்தமாக தங்களுடைய ஏஐ மாடல் மேம்பாட்டு பணிகளின் வேகத்தை குறைக்க வேண்டும். ஏஐ கட்டமைப்புகள் நம் கையைவிட்டு போகும் முன்பு அதை முறையாக கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு உடனே ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Gork தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஒப்புதல் அளித்து முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

ஏஐ மாடல் மற்றும் அதன் கட்டமைப்பை தொடர்ந்து ஆய்வு செய்ய மூன்றம் தரப்பு சோதனையாளர்களை ஊழியர்களுக்கு அளிக்கப்படும் access-ஐ கொடுத்து கிளாட் மாடல்களை ஆய்வு செய்யப்போவதாக டேரியோ அமோடேய் தெரிலவித்தார்.

இதோடு ஏஐ நம்முடைய வாழ்க்கையை பெரியளவில் மாற்றி எளிமையாக்கினாலும், தொடர்ந்து இதில் ஆபத்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார். மேலும் தற்போது ஏஐ மாடல்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் இதை மனிதனால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ஏஐ மாடல் வளர்ச்சி அடைந்து விடும், இதனாலேயே மேம்பாட்டு பணிகளின் வேகத்தை குறைத்து ஏஐ கட்டமைப்புகளை மனித கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார் டேரியோ.

ஏஐ மாடல்கள் மருத்துவ துறையில் பல கண்டுப்பிடிக்க முடியாத நோய்களுக்கு மருந்து கண்டுப்பிடிப்பது முதல் பொருளாதாக வளர்ச்சி முதல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேகப்படுத்த முடியும் என நம்பும் ஏஐ நிறுவன தலைவர்கள் அதை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என முடிவு எடுத்தது துறை ரீதியான வளர்ச்சிக்கும் சரி, மக்களின் நலனுக்காகவும் சரி பாராட்டத்தக்க ஓன்றாக மக்கள் பார்க்கின்றனர்.

இதனால் ஏஐ துறையின் வளர்ச்சி அடுத்த சில மாதங்களுக்கு அல்லது 1-2 வருடத்திற்கு மந்த நிலைக்கு செல்லக்கூடும். இதனால் ஏஐ துறை நிறுவனங்களின் பங்கு வளர்ச்சி தேக்க நிலையை அடையவும் வாய்ப்புள்ளது. இந்த கேப்பில் பல சிறிய நிறுவனங்கள் வேகமாக முன்னேற திட்டமிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+