ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய ஒரு டேட்டா சென்டர் அதாவது தரவு மையத்தை அமைக்க இருக்கிறது. தரவு மையங்கள் தற்போதைய காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டன. தரவு மையங்கள் என்றால் என்ன, சமகாலத்தில் அவை ஏன் அவசியம், இந்தியாவிற்கு தரவு மையங்கள் கட்டாயம் தேவையா, இதனை நடத்துவதில் என்னென்ன சவால்கள் இருக்கின்றன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
டேட்டா தான் நவீன ஆயுதம்: டேட்டா அதாவது தரவுகள், இது தான் இன்றைக்கு உலகையே ஆட்டிவைக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. இந்த டேட்டாவுக்காக தான் டெக் நிறுவனங்கள் பெருமளவில் போட்டியிடுகின்றன. உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பமும், ஏஐ தொழில்நுட்பமும் நொடிக்கு நொடி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு விநாடிக்கும் கோடிக்கணக்கானவர்கள் ஸ்மார்ட் போன்கள், இணையதளம், ஆன்லைன் ஷாப்பிங், கண்டெண்ட் உருவாக்கம் (புகைப்படம், வீடியோக்கள்) என இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

ஏஐ-க்கு டேட்டா சென்டர் தேவை: குறிப்பாக ஏஐ செயலிகள் வந்த பிறகு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாகவே இவை மாறிவிட்டன. இந்த தொழில்நுட்பங்கள் தங்கு தடையின்றி செயல்பட டேட்டா சென்டர்கள் தேவை. அதாவது நாம் உருவாக்கும் கண்டெண்ட்டுகள், கிளவுட் அமைப்பில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கு டேட்டா சென்டர்கள் இருக்க வேண்டும்.
24 மணி நேரமும் இயங்கும்: ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையே இந்த டேட்டாவும் டேட்டா சென்டர்களும் தான். டேட்டா சென்டர்கள் என்பது கணினிகள் , அதற்கு தேவையான சர்வர்கள், நெட்வொர்க் உபகரணங்கள் மற்றும் டேட்டா சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்கக் கூடிய ஒரு மையம். இது சுருக்கமாக கூறினால் நம்முடைய இணையம் மற்றும் டிஜிட்டல் உலகத்தின் இதயம் என சொல்லலாம். நாம் 24 மணி நேரமும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் இதற்கு 24 மணி நேரமும் டேட்டா மையங்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
ஸ்மார்ட் ஃபோன்கள் ,சமூக ஊடகங்கள் ,ஐஓடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் ஒவ்வொரு நாளும் மலை போல டேட்டாக்கள், படங்கள், வீடியோக்கள் உருவாகின்றன. அவற்றை சேமித்து பராமரிக்கும் இடங்கள் தான் தரவு மையங்கள். அமேசான் போன்ற நிறுவனங்களின் கிளவுட் சேவைகள் அனைத்துமே தரவு மையங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் நாம் எங்கு இருந்தாலும் இணையத்தில் ஒரு தகவலை உடனடியாக தேடி பெற்றுக் கொள்ள முடிகிறது.

இந்தியாவில் ஏன் அவசியம்: உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடு இந்தியா , இங்கே டிஜிட்டல் தொழில் நுட்பமும் மிக வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பங்களை நுகரும் மக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை வழங்க டேட்டா மையங்கள் அவசியம்.
விசாகப்பட்டினத்தில் டேட்டா மையம்: அந்த வகையில் தான் அண்மையில் அதானி என்டர்பிரைசஸ் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் இணைந்து ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த டேட்டா சென்டர் தமிழ்நாட்டிற்கு வராமல் ஆந்திராவிற்கு சென்றது ஏன் என்பது குறித்து கூட பல்வேறு வார்த்தை மோதல்கள் ஏற்பட்டதை நாம் பார்த்தோம்.
மனித உரிமை அமைப்பு கேள்வி: இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு இந்த டேட்டா மையங்கள் மிகவும் அவசியம். ஆனால் டேட்டா மையங்களை அமைத்து செயல்படுத்துவது என்பது பல சவால்களை கொண்டுள்ளது. அண்மையில் கூட மனித உரிமைகள் கூட்டமைப்பு விசாகப்பட்டினத்தில் எப்படி இந்த டேட்டா மையத்தை கட்டமைக்க அனுமதி தந்தீர்கள் என ஆந்திர அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.ஏனென்றால் விசாகப்பட்டினம் அதிக வெப்பநிலை கொண்ட நகரம், அடிக்கடி புயல் தாக்குதலுக்கு ஆளாகும் ஒரு நகரம் , பருவநிலை மாற்ற பாதிப்புகளால் எளிதாக பாதிக்கப்படக் கூடிய ஒரு கடற்கரை நகரம். இங்கே 1 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் செயல்பட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
டேட்டா சென்டரில் என்ன இருக்கும்?: டேட்டா சென்டர்கள் பெரிய பெரிய சர்வர்கள் கொண்ட இடம். இங்கே சர்வர்கள் சூடாகாமல் இருக்க குளிர்விப்பான்கள் தேவை அதாவது ஆங்கிலத்தில் cooling systems. இந்த குளிர்விப்பான்கள் இயங்க நல்ல தண்ணீர் அதிகம் தேவை. இது தான் இந்தியாவுக்கு இருக்கும் சவால். மனித உரிமைகள் கூட்டமைப்பின் ஆந்திர மாநில செயலாளர் ராஜேஷ், ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நிலத்தடி நீர் இல்லை, அப்படி இருக்கும் போது டேட்டா செண்டருக்கான தண்ணீரை அரசு எப்படி தரும் , இது சுற்றுபுறங்களில் வசிப்போருக்கு தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
டேட்டா மையம் அமைந்தால் பெரிய எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகாவது என கூறும் அவர் ஏற்கனவே கூகுளின் டேட்டா சென்டர்களால் உருகுவே நாட்டில் டாக்சிக் கழிவுகள் வெளியேற்றம், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

தண்ணீர் பிரச்சினை: அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் மெடாவின் மிகப்பெரிய டேட்டா மையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதனால் தங்களுடைய பகுதியில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த டேட்டா மையங்களுக்கு அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது, இது தண்ணீர் பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தன்னுடைய வீட்டின் நிலத்தடி நீரில் அதிக வண்டல் படிவு ஏற்பட்டுள்ளதாக பிபிசிக்கு பேட்டி அளித்திருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி கூறியிருக்கிறார்.
தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா: இதற்கிடையே தனிப்பட்ட முறையில் மெடா நிறுவனம் நடத்திய ஆய்வில் அந்த நிலத்தடி நீர் பிரச்சனைக்கும் டேட்டா மைய செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் கூட தற்போது இந்த பிரச்சனைதான் பெரிதாக எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்தவரை மிகப் பெரிய அளவிலான டேட்டா சென்டர் திட்டங்களுக்கு அனுமதி தர தயாராக இருக்கிறது. ஆனால் இது அங்கே பெரிய தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி விடுமோ என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மனிதகுலத்துக்கு புது பிரச்சினை: குறிப்பாக தெற்கு ஐரோப்பிய நாடுகளின் 30 சதவீத பகுதிகள் நிரந்தரமாக தண்ணீர் பிரச்சினை எதிர்கொள்ளக்கூடிய பகுதிகளாக இருக்கின்றன. மெட்டா நிறுவனம் ஸ்பெயினில் அராகான் என்ற பகுதியில் மிகப்பெரிய டேட்டா மையத்தை அமைக்க திட்டமிட்டது ஆனால் அங்கே விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர் . ஏற்கனவே பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பகுதிகளிலும் திடீரென அதிக மழை அல்லது தீவிரமான தண்ணீர் பஞ்சம் என சந்தித்திருக்கக்கூடிய சூழலில் இந்த டேட்டா மையங்களை சரியான இடத்தில் அமைத்து அவற்றை திறம்பட பராமரித்து செயல்படுத்துவது உலகிற்கே பெரிய சிக்கல் ஆக தான் எழுந்திருக்கிறது .
அயர்லாந்து, நெதர்லாந்தில் எதிர்ப்பு: 2022 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனம் நெதர்லாந்தில் அமைக்க இருந்த மிகப்பெரிய டேட்டா சென்டர் திட்டத்தை கைவிட்டது. அதேபோல அயர்லாந்தில் டேட்டா மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டமும் தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே புதிதாக டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பிரச்சனையும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தான் .
இந்தியாவுக்கு என்ன சவால்?: இந்தியாவைப் பொறுத்தவரை வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் ஏஐ தொழில்நுட்பத்திலு வளர்ச்சி அடைந்து வருகிறது . இத்தகைய சூழலில் டேட்டா மையங்கள் இந்தியாவிற்கு மிகவும் அவசியம் ஆனால் அந்த டேட்டா மையங்களை மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எப்படி வெற்றிகரமாக செயல்படுத்த போகிறோம் என்பது தான் நமக்கான சவாலாக இருக்கிறது. டேட்டா சென்டர்கள் இயங்க அதிக ,மின்சாரமும் அதிக அளவு தண்ணீரும் தேவை. மின்சாரம் தயாரித்து தங்குதடையில்லாமல் அவற்றை விநியோகம் செய்யும் சவாலும், தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டிய சவாலும் இந்தியாவுக்கு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications