செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், இத்துறைய சுற்றி ஒரு ஆபத்தான அலை இருந்துக்கொண்டு தான் உள்ளது. ஏஐ சேவைகள் பல துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் இதன் தாக்கம் தற்போது டெக் துறையை தாண்டி மற்ற துறைகளில் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
ஆம், ஏஐ தொழில்நுட்ப துறையில் அப்பிளிகேஷன் துறை 2026ல் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் மொத்த டெக்ஸ்டைல் தொழிற்சாலை, கார் உற்பத்தி தொழிற்சாலை, கண்டெய்னர் துறைமுகம் ஆகியவை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் முழுமையாக ஆட்டோமேட்டிங் முறையில் இயங்கி வருகிறது. இதேபோன்ற முன்னேற்றம் தற்போது மற்ற துறைகளிலும் வரவுள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு வங்கி சேவை துறையில் 200000 பேர் பணியை இழக்க கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

2025ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்கு பின்பு அதிகப்படியான பணிநீக்கம் டெக் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உண்மையானால், ஏஐ மூலம் அடுத்து வங்கித் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்பு குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள கணிப்பில் வங்கித் துறைக்கு AI தொடர்பான பணிநீக்க எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, ஐரோப்பிய வங்கிகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 200,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கித்துரையில் AI சேவைகள் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தால், மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிக் கிளைகள் மூடுவது அதிகரித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்ப சேவை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும் என்றாலும், ஊழியர்களுக்கு பெரும் சவாலாக அமையும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI ஆகியவற்றால் உருவாகும் திறன் மேம்பாடுகள் மனித ஊழியர்களின் தேவை குறைவதே பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இது போன்ற மாற்றங்கள் உலகளாவிய வங்கித் துறையை பாதிக்கலாம், இதேபோல் ஐரோப்பாவில் இது விரைவாக நடக்கும் என்று கணித்துள்ளது மோர்கன் ஸ்டான்லி. ஐரோப்பிய வங்கிகள் 2030ஆம் ஆண்டுக்குள் தங்கள் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்தை குறைக்கலாம். இந்த கணிப்பு 35 ஐரோப்பிய வங்கிகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டது என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்த 35 வங்கிகளில் மொத்தம் 21.2 லட்சம் பேர் பணியில் அமர்த்தியுள்ளனர்.
இதேபோன்ற தாக்கம் இந்தியாவிலும் வரலாம், இந்தியாவில் இந்த தாக்கம் சற்று மாறுப்படலாம். எப்படியென்றால் இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் மக்களுக்கு முழுமையான வங்கி சேவைகள் கிடைக்காமல் இருக்கும் வேளையில் ஏஐ சேவைகள், ஆட்டோமேஷன் சேவை மூலம் சிறு கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு வங்கி சேவைகளை குறைவான ஊழியர்கள் படையுடன் கொண்டு சேர்க்கப்படும். இதனால் வங்கித் துறையில் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள் குறையலாம். இதேபோல் முக்கிய நகரங்களில் இருக்கும் அதிகப்படியான வங்கி ஊழியர்கள் ஏஐ சேவை வாயிலாக பணிநீக்கம் செய்யப்படலாம் அல்லது இடம்மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications