ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..?

ஏஐ தொழில்நுட்பம் தற்போது மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் வேளையில் ஒவ்வொரு ஊழியரும் ஏஐ பயன்பாட்டு அடிப்படையில் 4 வகையில் பிரிக்கலாம் என PwC தனது ஆய்வறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த மாடலை இனி ஒவ்வொரு நிறுவனமும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பது தான் தற்போதைய பிரச்சனை.

ஒரு நிறுவனத்தில் ஏஐ பயன்படுத்தி வேலைகளை வேகமாகவும், திறன்மிக்க வகையில் முடிக்கும் ஒருவரையும், அதேவேளையில் வழக்கம் போல் மனித திறனை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி செய்யும் ஒரு ஊழியரையும் எப்படி நிறுவனம் பார்க்கும் என்பதைத் தான் இந்த PwC ஆய்வறிக்கை கூறுகிறது.

ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..?

உலகளாவிய முன்னணி கன்சல்டிங் நிறுவனமான PwC எனப்படும் PRICE WATERHOUSE COOPERS நிறுவனம் சுமார் 48 நாடுகளில் 29 துறைகளைச் சேர்ந்த 49,364 ஊழியர்களை ஆய்வு செய்ததில் ஊழியர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர், front-runners, AI insurgents, indispensables மற்றும் engine room workers.

இந்த ஆய்வில் பங்கு பெற்ற 56 சதவீத ஊழியர்கள் இன்ஜின் ரூம் ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள், இவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை மிகவும் குறைவாகப் பயன்படுத்தி வருகிறார்கள், இதேபோல் ஏஐ தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு மிகவும் குறைவாக இகுக்கும் காரணத்தால் இவர்களை இப்பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Also Read

இதனால் ஒவ்வொரு ஊழியரும் ஏஐ தொழில்நுட்பத்தை எந்தளவுக்கு தங்களுடைய பணியில் பயன்படுத்துகிறோம் என்பதன் அடிப்படையில் தான் இனி கரியர் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஏஐ என்றால் சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்றவை மட்டும் அல்ல ஏஐ அடிப்படையிலான டூல்ஸ், பிளக்கின் என பல விஷயங்கள் பணியை ஆட்டோமேட் செய்வதில் உள்ளது.

இதில் Front-runners ஊழியர்கள் தங்களுடைய வேலையில் எந்தளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து இயங்குகிறார்கள், இதன் மூலம் அவர்களுடைய பணி எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த 49000 ஊழியர்களில் வெறும் 14 சதவீதம் பேர் தான் Front-runners பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

எனவே நீங்கள் ஐடி துறையில் இருந்தாலும் சரி உற்பத்தித் துறையில் இருந்தாலும் சரி ஏஐ தொழில்நுட்பத்தை உங்கள் பணியில் எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தீவிரமாக ஆலோசனை செய்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. அடுத்த சில வருடத்தில் இந்த வகைப்பாடு அடிப்படையில் சம்பள உயர்வும் விதிக்கப்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+