Accenture: ஏஐ பீதிக்கு மத்தியில் லட்டு மாதிரி வந்த வாய்ப்பு.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

செயற்கை தொழில்நுட்பம் ஒட்டுமொத்த டெக் துறையைச் சிக்கலில் தள்ளியுள்ள நிலையில், அக்சென்சர் நிறுவனத்தின் மூலம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான குவான்டாஸ் தனது தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்தவும், ஏவியேஷன் மற்றும் சுற்றுலாத் துறையில் அதிகரித்து வரும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் மிக முக்கியமான டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்தை அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

Accenture: ஏஐ பீதிக்கு மத்தியில் லட்டு மாதிரி வந்த வாய்ப்பு.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

குவான்டாஸ் நிறுவனம் இதுநாள் வரையில் தனது பெரும் பகுதி டெக் பணிகளைச் சொந்தமாக நிறுவனத்திற்குள்ளேயே செய்து வந்த நிலையில் தற்போது அவுட்சோர்சிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக குவான்டாஸ் மற்றும் அக்சென்சர் நிறுவனத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட பல வருட ஒப்பந்தத்தில் 850 ஊழியர்களுக்கான பணிகளை அவுட்சோர்ஸ் செய்யப்படும் நிலையில் இதில் பெரும்பகுதி பணிகளை இந்தியாவில் இருந்து செய்யப்பட உள்ளது.

இதனால் அக்சென்சர் இந்திய அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து குவான்டாஸ் நிறுவனத்தின் சிஇஓ வெனேசா ஹட்சன், ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில், இந்த பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் கடுமையான செய்தியாக இருக்கலாம், இத்தகைய நிலை நிறுவனத்தில் உருவானதிற்கு என்னை மன்னிக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.

நம்முடைய தொழில்நுட்பத்தை அக்சென்சர் மேம்படுத்தும் இதேவேளையில், நிர்வாகம் பெரும் தொகையை வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்கால சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதேபோல் இந்த அவுட்சோர்சிங் மூலம் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ மூலம் டெக் டெவலப்மென்ட் வேகமாக வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளார் வெனேசா ஹட்சன். மேலும் இந்த அவுட்சோர்சிங் பணிகள் அடுத்த வருடம் மத்தியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக பைனான்ஸ், கொள்முதல், ஹெச்ஆர், மார்கெட்டிங் போன்ற பிரிவில் இருக்கும் பணிகள் அக்சென்சர் நிறுவனத்திற்கு மாற்றப்படும். இந்த சேவைகளைப் பெரும்பகுதி இந்தியாவில் இருந்து பெறப்படும் எனவும் வெனேசா ஹட்சன் தெரிவித்தார்.

மேலும் இந்த மாற்றத்தால் பணிநீக்கத்தை எதிர்கொள்ளும் நபர்கள் திறன் மேம்பாடு மூலம் நிறுவனத்தின் மற்ற பிரிவுகளில் நியமிக்கப்படும் வாய்ப்பும் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார் வெனேசா ஹட்சன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+