செயற்கை நுண்ணறிவு சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் முதலீட்டு சந்தைக்கு என தனியாக இதுவரையில் எவ்விதமான முதலீட்டு ஆலோசனை வழங்கும் ஏஜ சேவை வரவில்லை. இந்த நிலையில், முன்னணி முதலீட்டு ஆலோசனை நிறுவனமாக ஜேபி மோர்கன் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
சமீபத்தில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Dukaan நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் ஊழியர்களின் பணியை ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் AI Chatbot-ஐ கொண்டு இயக்க முடிவு செய்தது. இந்த AI Chatbot சிறப்பாகவும், வேகமாகவும் இயங்கிய காரணத்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து 90% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது ஆரம்பக்கட்டம், மறுமுனையில் கூகுள் தற்போது AI துறையில் போட்டியை விரிவுபடுத்த மருத்துவத் துறையில் AI பயன்பாட்டைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக மெடிக்கல் ஏஐ சேட்பாட் ஆன Med-PaLM 2 என்ற தொழில்நுட்பத்தை மருத்துவமனையில் ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது கூகுள், இந்த சோதனை வெற்றி அடையும் நிலையில் மருத்துவ துறையில் பெரும் மாற்றம் உருவாகும்.
இந்த நிலையில் உலகளவிலான வர்த்தக சந்தையை இயக்கும் முதலீட்டு சந்தையை இயக்க ஒரு AI சேவையை உருவாக்க முடியாதா என்ன..? இதை தான் தற்போது JP MORGAN செய்து வருகிறது, IndexGPT என்ற AI சேவை பத்திர முதலீடுகள், நிதி முதலீடுகள், நிதியியல் விவகாரங்கள் பிரிவில் பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து அதன் மூலம் முதலீட்டுக்கான தீர்வு காணும் சேவையை IndexGPT வாயிலாக பெற திட்டமிட்டு உள்ளது.
ஜேபி மோர்கன் உருவாக்கி வரும் இந்த IndexGPT சாமானிய மக்களின் பயன்பாட்டுக்கு வருமா என்பது தெரியவில்லை. ஆனால் முதலீட்டு சந்தையில் AI சேவை அதுவும் கடந்த கால டேட்டா, ரியல் டைம் டேட்டா வைத்து எதிர்கால வர்த்தக சூழ்நிலையை மையமாக வைத்து முதலீட்டு ஆலோசனை வழங்கும் ஒரு AI சேவையை உருவாக்கினால் லாபத்தை அள்ள முடியும்.
இது எளிதாக இருந்தாலும், இதன் நம்பகத்தன்மை குறித்து கட்டாயம் பல கேள்விகள் இருக்கும். மேலும் ஆய்வுக்காக AI பயன்படுத்தும் தரவுகள் எது..? யார் கொடுத்தது என்பது போன்ற பல காரணிகள் முக்கியமானதாக இருக்கும். இதை கடந்து சரியான ஆலோசனையை AI வழங்கும் போது கட்டாயம் அது இலவசமாக இருக்க வாய்ப்பு இல்லை..
எலான் மஸ்க், சுந்தர் பிச்சை, OpenAI சாம் ஆல்ட்மேன் போன்ற முக்கியமானோர் ஏதாவது புரட்சி செய்தால் உண்டு. பொருத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

வங்கி வேலைகளிலும் கை வைக்கும் ஏஐ..!! முதல் கட்டமாக 20,000 பேரின் வேலை காலி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications