செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பறித்த வண்ணம் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிலேயே பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிகம் பயன்படுத்த தொடங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது.
பல்வேறு நிறுவனங்களும் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தோடு தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலை விட்டு செல்லலாம் என வெளிப்படையாகவே அறிவித்தன. மனிதர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை சக ஊழியர்களாக கருதி வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு சூழல் தற்போது உண்டாகியிருக்கிறது.

இந்த சூழலில் GodFather of AI என அழைக்கப்படும் என அழைக்கப்படும் ஜெஃப்ராய் ஹிண்டன், முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2026 ஆம் ஆண்டில் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும் இதன் மூலம் இன்னும் நிறைய நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனக் கூறியிருக்கிறார்.
2025ஆம் ஆண்டு ஏஐ தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமான ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது என கூறியிருக்கிறார். 2026இல் ஏஐ அமைப்புகள் இன்னும் திறன் பெற்ற வகையாக மாறி இருக்கின்றன என்றும் எதிர்பார்ப்புகளை விட வேகமாக இந்த தொழில்நுட்பம் வளர்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
ரீசனிங் மற்றும் டாஸ்க் கம்ப்ளீசன் ஆகியவற்றில் ஏஐ அதிக அளவில் மேம்பட்டு உள்ளது என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் ஏற்கனவே கால் சென்டர் வேலைகளில் இருந்து மனிதர்களை நீக்கிவிட்டது என குறிப்பிட்டு இருக்கும் அவர் மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலைகளை ஒரு மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பங்கள் முடிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
மென்பொருள் பொறியாளர்கள் பல மாதங்கள் செய்யக் கூடியது வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் சில நாட்களிலேயே முடித்து விடுகிறது என கூறியுள்ளார். தொழில்புரட்சி வருகை தந்து மனிதர்களின் உடல் உழைப்புகளை குறைத்ததோ அதேபோல ஏஐ மனிதர்கள் மூளையை பயன்படுத்தி செய்யக்கூடிய வேலைகளை தற்போது குறைத்து வருகிறது என்றார்.
குறிப்பாக ஒயிட் காலர் வேலைகள் இன்னும் பறிபோகும் என கூறியுள்ளார். பல்வேறு நிபுணர்களும் நிறுவனங்கள் தீவிரமாக ஏஐ பயன்படுத்துவது மனித குலத்துக்கே பெரிய ஆபத்தாக மாறுகிறது என தொடர்ச்சியாக கூறியுள்ளனர். நிறுவனங்களின் ஏஐ மூலம் வேலையை முடித்து லாபத்தை அதிகரிக்கின்றன ஆனால் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர், இந்த போக்கு ஆபத்தானது என்கின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications