AI மூலம் உங்க வேலைக்கு ஆபத்தா? அப்படியெல்லாம் இல்ல பாஸ்.. நம்பிக்கை கொடுக்கும் ஸ்ரீதர் வேம்பு.!!

இன்றைய உலகில், தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பலர் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். வேலைகள் இல்லாமல் போகும் என்றும், தொழில்கள் மாற்றமடையும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி வேகமானது என்றாலும், வேலை சந்தையில் இதுவரை பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். AI பற்றிய உண்மையான நிலையை எளிமையாகவும் யதார்த்தமாகவும் புரிய வைத்துள்ளார்.

அவர் கூறுவது என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு வளர்ந்தாலும், இதுவரை வேலை சந்தையில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்பதாகும். ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தளமான எக்ஸ் இல் இது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதாவது விற்பனையாளர்கள் செயற்கை நுண்ணறிவை கொண்டு பெரிய சேமிப்புகளை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் தற்போது வரை, AI வேலை சந்தையில் சிறிய தாக்கம் தான் ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

AI மூலம் உங்க வேலைக்கு ஆபத்தா? அப்படியெல்லாம் இல்ல பாஸ்.. நம்பிக்கை கொடுக்கும் ஸ்ரீதர் வேம்பு.!!

அதற்காக அவர் ஒரு ஆய்வை எடுத்துக் காட்டுகிறார். பெரிய மொழி மாதிரிகள், சிறிய வேலை சந்தை தாக்கங்கள் என்ற ஆய்வு ஒன்றின் முடிவுகளை எடுத்துரைத்தார். டென்மார்க் நாட்டின் தரவுகளை வைத்து ஆய்வு செய்தனர். ஆராய்ச்சியாளர்கள் ஆண்டர்ஸ் ஹம்லம் மற்றும் எமிலி வெஸ்டர்கார்ட் ஆகியோர் நடத்திய இந்த ஆய்வில், பல விஷயங்கள் தெரிய வந்தன. நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவை அதிகமாக பயன்படுத்தினாலும், உற்பத்தித்திறன் (Productivity) அதிகரிக்கவில்லை. வேலை வாய்ப்புகள் (Jobs) அதிகமாகக் குறையவும் இல்லை. வேலை சந்தையில் (Job Market) பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

சாட்பாட்கள்(chatbots) மற்றும் பிற AI கருவிகளை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும், நிறுவனங்கள் செயல் முறை (Operations) உற்பத்தியில் (Production) பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தான் இருக்கின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது. நிறுவனங்கள் AIஐ பயன்படுத்த ஆரம்பித்தாலும், முழுமையான மாற்றத்திற்காக அவர்கள் இன்னும் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். வேலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு புதிய பயிற்சிகளை வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், வெறும் AI கருவிகளை மட்டும் சேர்த்தால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு விரைவாக வளர்கிறது என்பது உண்மை. ஆனால் அது ஒரே இரவில் பெரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பது தவறு. தொழில்நுட்ப வளர்ச்சியை உண்மை சோதனையாக பார்க்க வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அவரது கருத்துப்படி, இன்னும் பெரிய வேலை இழப்புகள் நிகழவில்லை. நிறுவனங்களில் பெரிய செலவு சேமிப்புகள் (Cost savings) ஏற்பட்டதற்கான தெளிவான ஆதாரமும் இல்லை. எதிர்காலத்தில் மாற்றங்கள் நிச்சயமாக ஏற்படும். ஆனால் அதற்குத் தேவையான கட்டமைப்புகள் (Infrastructure) இன்னும் உருவாக்கப்படவில்லை.

வேம்பு வெளியிட்ட கருத்துக்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பயனர்கள் அவரை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர் கூறினார், இப்போது AI பற்றி நடக்கும் விவாதங்கள், 1970-80களில் கணினிகளைப் பற்றிய பேச்சைப் போல் உள்ளது. ஆரம்பத்தில் எல்லாம் பயமாக இருந்தது. ஆனால் பின்னர் கணினிகள் வேலைகளை மாற்றின. மனிதர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கின. அதுபோல், AIக்கும் நடக்கும்.

மற்றொரு பயனர், பலர் AIயை ஜெனரேட்டிவ் AI (ChatGPT போன்றது) உடன் குழப்புகிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பணியாளர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள். இடையூறுகள் குறைவாகவே இருக்கும் என்றார். அவருடைய அனுபவத்தில், பலரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் AIயின் உண்மையான வித்தியாசத்தை புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்து தொழில்நுட்ப உலகில் முக்கியமான கருத்தாக பேசப்படுகிறது. இன்று செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைப் பார்த்து பயப்பட வேண்டியது இல்லை, உண்மையாக அணுக வேண்டும் என்பதையும், புதிய திறன்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். அறிவியல் வளர்ச்சி நம்மை பயப்பட செய்யாமல், அதனுடன் சேர்ந்து வளர ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்பதே அவர் பகிர்ந்த முக்கியமான கருத்தாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+