கூகுள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. ஆனால் இது நிறுவனங்களுக்கு தான் ஆபத்தை ஏற்படுத்தும் என ஈனாம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு பிரிவு இயக்குநரான ஸ்ரீதர் சிவராம் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்டவர்களுக்கும் பிரஷர்களுக்குமான வேலை வாய்ப்புகளை பறிக்கிறது என கூறியுள்ளார். மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் வளர்ச்சி குறித்த தன்னுடைய பார்வைகளை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் ஐடி துறையில் கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களே ஏஐ வருகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். ஐடி துறையில் 30 சதவீதம் பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள் மற்றும் பிரஷர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் வேலைவாய்ப்பை தான் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பறித்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு எப்படி இருந்தது என்பதை பாருங்கள் கடந்தாண்டு எந்த நிறுவனமும் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கவில்லை அதற்கு முந்தைய ஆண்டு மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் கூட புதிதாக யாரும் வேலைக்கு எடுக்காமல் ஏற்கனவே இருந்தவர்களை கூட பணிநீக்கம் செய்தன என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறுவனத்தின் செயல்பாடுகளை மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது என சில தலைவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது ஆனால் நீண்ட கால நோக்கில் இது ஐடி நிறுவனங்களுக்கு பிரச்சினையாக தான் முடியும் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் மனித வளத்திற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு ஐடி நிறுவனங்கள் சேவைகளை வழங்கும்போது அவர்களுடைய கிளையண்ட்கள் இதுநாள் வரை குறிப்பிட்ட அந்த சேவைக்கு வழங்கி வந்த தொகையை குறைத்து விடுவார்கள் இது ஐடி நிறுவனங்களின் லாபத்தையும் வருவாயையும் பாதிக்கும் கூடும் என கூறுகிறார்.
அதாவது ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் அவை அதிக லாபம் ஈட்டுகின்றன எனக் கூறுவது உண்மை கிடையாது என தெரிவிக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது அதே வேளையில் ஒரு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என கூறுகிறார். ஆனால் இந்த இரண்டில் முதலில் வருவது அச்சுறுத்தல் தான் என தெரிவிக்கிறார். எனவே ஏஐ ஒருங்கிணைப்பில் நிறுவனங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications