ஐடி, டெக் நிறுவனங்களில் இனி Layoff-ஐ தடுக்க முடியாது..!! காரணம் ஏஐ இல்ல, RPE..!!

தொழில்நுட்ப சேவை துறையில் பணிநீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐடி, டெக் நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. இனி வரும் காலத்தில் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதலீட்டாளர் நலன், வளர்ச்சி என அனைத்தும் 'இதை' நம்பி தான் இருக்கப்போகிறது.

ஆம் ஐடி, டெக் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகத்தில் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் "ரெவென்யூ பெர் எம்ப்ளாயி" (Revenue Per Employee - RPE) என்ற அளவுகோல் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. இது நிறுவனங்களின் மொத்த வருவாயை ஊழியர் எண்ணிக்கையால் வகுத்து கணக்கிடப்படும் ஒரு விகிதம்.

ஐடி, டெக் நிறுவனங்களில் இனி Layoff-ஐ தடுக்க முடியாது..!! காரணம் ஏஐ இல்ல, RPE..!!

இந்த ஒரு விகிதம் தான் இப்போது யார் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள், யார் பதவி உயர்வு பெறுகிறார்கள், யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. இதனால் இனி ஒவ்வொரு மாதமும், காலாண்டு முடிவுகளுக்கு பின்பு ஐடி, டெக் நிறுவனங்களில் ஒரு பீதி உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது.

ரெவென்யூ பெர் எம்ப்ளாயி ஏன் முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியம்?
ரெவென்யூ பெர் எம்ப்ளாயி என்பது ஒரு ஊழியர் எவ்வளவு வருவாய் உருவாக்குகிறார் என்பதை நேரடியாகக் காட்டுகிறது. TCS ஒரு ஊழியருக்கு சுமார் 50,000 டாலர் வருவாய் ஈட்டுகிறது. Amazon-ல் ஒரு ஊழியர் 500,000 டாலர் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

AI தொழில்நுட்ப நிறுவனமான Anthropic போன்ற நிறுவனங்கள் ஒரு ஊழியருக்கு 2.15 மில்லியன் டாலர் வரையிலான வருவாயை ஈட்டுகின்றன. இது டிசிஎஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் 10 மடங்கு முதல் 50 மடங்கு வரையிலான செயல்திறன் வேறுபாட்டைக் காட்டுகிறது. முதலீட்டாளர்கள் இந்த வேறுபாட்டை மிகக் கவனமாகப் பார்க்கின்றனர். ஏனெனில் இது நிறுவனத்தின் லாபம், வளர்ச்சி, மதிப்பீடு ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது என தீவிரமாக நம்ப துவங்கியுள்ளனர்.

ஐடி, டெக் நிறுவனங்களில் இனி Layoff-ஐ தடுக்க முடியாது..!! காரணம் ஏஐ இல்ல, RPE..!!

வளர்ச்சி காலம் முடிந்து செயல்திறன் காலம் தொடங்கியது
கடந்த பத்தாண்டுகளில் முதலீட்டாளர்கள் வளர்ச்சியை மட்டுமே பார்த்தனர். வருவாய் அதிகரிப்பு, சந்தை விரிவாக்கம், பயனர் எண்ணிக்கை அதிகரிப்பு - இவை எல்லாமே முக்கியமாக இருந்தன. லாபம் வருவது 2ஆம் கட்ட அளவீடாக கருதினர். ஆனால் இப்போது அந்த காலம் முடிந்துவிட்டது.

இப்போது செயல்திறன், ஒரு ஊழியரால் எவ்வளவு வருவாய் உருவாக்க முடியும் என்பதே முதன்மை காரணியாக மாறியுள்ளது. AI கருவிகள் மூலம் தற்போது யார் வேண்டுமானாலும் கோடிங் எழுத முடியும் என்பதால் ஒரு ஊழியரின் உற்பத்தித்திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே Revenue Per Employee - RPE அளவுகோல் முக்கியமானதாக மாற முதன்மை காரணமாக உள்ளது.

பணிநீக்கங்கள் ஏன் நடக்கின்றன?
பணிநீக்கங்கள் வெறும் AI காரணமாக நடப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதை விட ஆழமானது என்பதை உணர்த்துவது தான் Revenue Per Employee அளவுகோல். நிறுவனங்கள் இப்போது மிடில் மேனேஜ்மென்ட் அடுக்குகளைக் குறைத்து, வருவாய் உருவாகாத பிரிவுகளை நீக்கி, பணிகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தின் FLAT நிர்வாக முறையை கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஊழியரும் இனி வரும் காலக்கட்டத்தில் தங்களுக்காக நிறுவனம் செய்யும் செலவை நியாயப்படுத்த வேண்டும், அதாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வருவாய் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பணியிடத்தை இழக்கும் அபாயம் அதிகரிக்கிறது.

ஐடி, டெக் நிறுவனங்களில் இனி Layoff-ஐ தடுக்க முடியாது..!! காரணம் ஏஐ இல்ல, RPE..!!

சந்தை ஏற்ற இறக்கம்
சமீபகால டெக் பங்குகளின் ஏற்ற இறக்கம் இந்த மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது. முதலீட்டாளர்கள் இப்போது "AI கருவிகள் உற்பத்தித்திறனை பெரிதும் அதிகரிக்கும் போது, ஏன் பழைய செயல்திறன் அளவுகளில் நிறுவனங்கள் கணக்கிடப்பட வேண்டும்?" என்ற கேள்வி எழுந்துள்ளது. Claude Code, Copilot போன்ற AI கருவிகள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் மூன்று பேரின் வேலையை செய்ய முடியும் என்றால், நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

புதிய மாடல்
இதனால் AI-அடிப்படையிலான நிறுவனங்கள் தற்போது மாறுப்பட்ட வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதல் சிறிய குழுக்களாக இயங்குகிறது, அதிக ஆட்டோமேஷன், AI-ஐ அடிப்படையாகக் கொண்ட வொர்க்ஃப்லோ, வேகமான முன்னேற்றம் என இயல்பாகவே ரெவென்யூ பெர் எம்ப்ளாயி விகிதத்தை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்துகின்றன.

இதன் காரணமாக பல வருடங்களாக இயங்கி வரும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் இப்போது இந்த புதிய மாடலை பின்பற்ற முயற்சி செய்ய துவங்கியுள்ளன. இதன் எதிரொலியாகவே பணிநீக்கம் தொடர்ந்து நடக்கிறது.

ஐடி, டெக் நிறுவனங்களில் இனி Layoff-ஐ தடுக்க முடியாது..!! காரணம் ஏஐ இல்ல, RPE..!!

தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இப்போது வளர்ச்சியை மட்டும் பார்க்கவில்லை. செயல்திறனே வெற்றியை தீர்மானிக்கிறது. ஒரு ஊழியர் எவ்வளவு வருவாய் உருவாக்குகிறார் என்பதே முக்கியம். இந்த புதிய Revenue Per Employee அளவுகோல் பணிநீக்கங்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, நிறுவனத்தின் வடிவமைப்பு ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+