செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக ஏராளமானவர்கள் வேலைகளை இழப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐடி துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு செயற்கை நுண்ணறிவு காரணம் அல்ல என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி தெரிவித்துள்ளார்.
நேஷனல் கவுன்சில் ஆஃப் எக்கனாமிக் ரிசர்ச் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வரக்கூடிய நந்தன் நீலகேணி அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோக கூடும் என்ற அச்சம் ஒருபுறம் எழுந்திருந்தாலும் அது மட்டுமே ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறைவதற்கு காரணம் அல்ல" என தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நிறுவனங்களின் தன்னிச்சையான செலவினங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த குறைப்பு என்பது ஒரு சுழற்சி சார்ந்த விஷயம் என தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்புகள் அதிகமாக இருக்கும் காலம் வரலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். "இருந்தாலும் நாம் ஒரு நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் இதனை பார்க்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு குறித்த பல அச்சங்கள் உள்ளன, அவற்றில் சில நியாயமானவை சில நியாயமற்றவை . எப்போது ஒரு புதிய தொழில்நுட்பம் வருகிறதோ அப்போது சில வேலைகள் பறி போகும் ஆனால் புதிய வேலைகள் உருவாகும்" என்றார்.
ஒரு காலத்தில் வேலை இழப்பு என்பது ஆதாயத்தை விட அதிகமாக இருக்கும் எனவே இந்தியாவில் நாம் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என நந்தன் நீலகேணி தன்னுடைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிலிருந்து நாடு பெரிய அளவில் பயன் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட நந்தன் நீலகேணி ஆதார் மற்றும் யுபிஐ ஆகியவை நமது வாழ்க்கை முறையை மாற்றி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல தான் செயற்கை நுண்ணறிவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான லாங்குவேஜ் மாடல்கள் எதிர்காலத்தில் பொருட்களாக மாறும் என்றும் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது முக்கியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பணம் செலவு செய்து இது போன்ற லாங்குவேஜ் மாடல்களை உருவாக்குகிறார்கள் இந்த மாடல்களை உருவாக்குவது முக்கியமல்ல, இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் இதில் தான் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நந்தன் நீலகேணி வலியுறுத்தியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications