தற்போது வேலைவாய்ப்பு சந்தையே பெருமளவில் மாறி வருகிறது. ஜென் ஸீ தலைமுறைக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. அப்படி கிடைத்தாலும் இவர்கள் வேலையை அணுகுமுறை மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் Engineering Vs MBA-இல் எந்த படிப்பு இப்போது டிரெண்டாக உள்ளது என பார்க்கலாம்.
டெலாய்ட் இந்தியா நிறுவனம் Campus Workforce Trends 2026 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் Campus Hiring மற்றும் பணியாளர் தேர்வு முறை தற்போது முற்றிலும் புதிய திசையை நோக்கி மாறி வருகிறது, கல்வி தகுதியை விட தனித்திறன்களுக்கு நிறுவனங்கள் அதிக முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது.

86% நிறுவனங்கள் தங்களது கேம்பஸ் இண்டர்வியூ மற்றும் பணியாளர் தேர்வு செயல்முறைகளில் ஏஐ பயன்படுத்துகின்றன. அதாவது விண்ணப்பங்களை சரிபார்த்தல் , ஏஐ மூலம் அதற்கு மதிப்பீடுகள் வழங்குவது உள்ளிட்ட ஹெச் ஆர் வேலைகளை ஏஐ தான் மேற்கொள்கிறது. மேலும் ஏஐ மற்றும் தரவு சார்ந்த திறன்களை பெற்றிருப்பவர்களுக்கு 20% முதல் 25% வரை கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறதாம். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை தொடர்ந்து இருந்தாலும், ஒட்டுமொத்த சம்பள பிரிவில் எம்பிஏ பட்டதாரிகள் இன்ஜினியரிங் பட்டதாரிகளை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் ஊதியத்தை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னனி கல்வி நிறுவனங்களில் எம்பிஏ முடித்தவர்களின் சராசரி சம்பளம் 27 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில் பிடெக் படித்தவர்களுக்கு சராசரி சம்பளம் 18 லட்சம் ரூபாயாக தான் உள்ளதாம். இதனால் கல்வி நிறுவனங்களின் தரம், சிறப்பு படிப்புகள் மற்றும் கிரிட்டிக்கல் திறன்கள் ஆகியவை தற்போது சம்பளத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறது.
எனவே கல்லூரி பயிலும் மாணவர்கள் இந்த திறனை வளர்த்து கொள்வது நல்லது. மேலும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளன என்கிறது. எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பை தாண்டி தனி திறன்களை வளர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஏஐ கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் எந்த துறையில் படித்தாலும் அந்த துறையில் ஏஐ பயன்பாடு குறித்து நிபுணத்துவம் பெறுவது நல்லது என்கிறது இந்த ஆய்வறிக்கை.
எனவே கல்லூரி பயில்வோர்,வேலை தேடுவோர் படிப்பு மட்டுமில்லாமல் தனி திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இது தான் உங்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்ல சம்பளத்தையும் உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications

