செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல துறை ஊழியர்களுக்கு வேலை இழக்கும் பயத்தை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. இந்த நிலையில் அனைத்து துறையிலும், அனைத்து நிறுவனங்களும் தற்போது செலவுகளை குறைக்கும் விதமாக ஆட்டோமேஷன் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளது.
இதனால் வேலைவாய்ப்புகளை இழப்போரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றம் (WEF) 800 நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் 2027 ஆம் ஆண்டிற்குள் 69 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆனால் இதே காலக்கட்டத்தில் 83 மில்லியன் வேலைவாய்ப்புகள் நீக்கப்படும் என்று WEF கண்டறிந்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் அதாவது 1.4 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை இழக்க கூடிய 3 முக்கிய துறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி துறை : செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் தாண்டி ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் உற்பத்தி துறையில் பெரிய ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் உற்பத்தி திறனை வேகமாகவும், குறைந்த செலவிலும், நீண்ட கால அடிப்படையில் லாபம் அளிக்கும் வர்த்தகத்தை உருவாக்க நினைத்தும் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தொழில்நுட்ப உதவியை நாடும். இதனால் இத்துறையில் அடுத்த சில வருடத்தில் வேலைவாய்ப்புகள் குறையும்.

போக்குவரத்து : தானியங்கி தொழில்நுட்பம், டிரான் டெலிவரி ஆகியவற்றின் மூலம் கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், குவிக் காமர்ஸ் டெரிவரி ஊழியர்கள் வேலை இழக்க கூடும்.
ஹெல்த்கேர் துறை : மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியதால் நோய் கண்டறிந்து அதற்கான தீர்வு கூறும் பரிவில் தொழில்நுட்பம் பெரிய அளவிலான மாற்றத்தை செய்ய செய்ய உள்ளது. இதனால் மருத்துவ துறையிலும் பல பிரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இழக்க கூடும்.


Click it and Unblock the Notifications