AI நம்பி மோசம் போன நிறுவனங்கள்.. மீண்டும் மனிதர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம்..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட வேகமாக வேலைகளை முடிக்கிறது, கோடிங் உள்ளிட்டவற்றை எல்லாம் நொடியில் உருவாக்குகிறது என கூறி பல்வேறு நிறுவனங்களும் மனிதர்களை பணிநீக்கம் செய்து அந்த வேலைக்கு ஏஐ ஏஜெண்ட்களை பணியில் அமர்த்துகின்றன. ஆனால் அது பெரிய தவறு என்பதை நிறுவனங்கள் உணர தொடங்கி விட்டன.

தொடக்கத்தில் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு மாற்று தீர்வு கருவியாக பார்த்தன. ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களின் அனுபவத்தையும், நுண்ணறிவையும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியவில்லை. ஃபோர்டு (Ford) மற்றும் கிளர்னா (Klarna) போன்ற பெரிய நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர் சேவை தரத்தை முழுமையாக பராமரிக்கவோ அல்லது அனைத்து தவறுகளையும் துல்லியமாக கண்டறியவோ முடியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்பு கொண்டுள்ளன.

AI நம்பி மோசம் போன நிறுவனங்கள்.. மீண்டும் மனிதர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம்..!!

வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, ஏஐ நம்பி தரக்கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டபோது எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனால், பல வருட அனுபவம் வாய்ந்த 350 பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியதுடன் அவர்களுக்கு பதவி உயர்வும் அளித்துள்ளது.

SHL மற்றும் Orgvue போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, ஏஐ காரணமாக பணியை இழந்தவர்களில் சுமார் 19.1% அமெரிக்க தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பழைய வேலைக்கே அழைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டனை பொறுத்தவரை இந்த விகிதம் சராசரியாக 16% ஆக உள்ளது.

Also Read

மனிதர்கள் வேண்டாம் ஏஐ வைத்து வேலை வாங்கி கொள்ளலாம் என நம்பிய 55% முதலாளிகள் இது ஒரு தவறான முடிவு என வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் Gartner என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஏஐ காரணமாக கூறி வாடிக்கையாளர் சேவை பணியாளர்களை நீக்கிய நிறுவனங்களில் 50% நிறுவனங்கள், 2027-க்குள் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கூடும் என உறுதியாக கூறியுள்ளது.

அதே வேளையில், நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டு, இப்போது மீண்டும் நிறுவனங்களால் அழைக்கப்படும் ஊழியர்கள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். 51% தொழிலாளர்கள் கணிசமான ஊதிய உயர்வை கோருகின்றனர். 42% தொழிலாளர்கள் தங்களது வேலைக்கு உத்தரவாதம் என எழுத்துப்பூர்வ ஆவணத்தை கேட்கின்றனர். 40% தொழிலாளர்கள் நிறுவனத்தில் ஏஐ எந்த அளவுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வெளிப்படைத்தன்மையை கோருகின்றனர் என்கிறது கார்ட்னர் அறிக்கை.

Recommended For You

பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பிய நிலையில் திடீரென மனிதர்களையே பணியில் அமர்த்துவதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. ஏஐ-க்கு டேட்டா கொடுக்கலாமே தவிர, அந்த நிறுவனத்தின் நீண்டகால சூழலையும் பின்னணியையும் அதனால் புரிந்து கொண்டு வேலை செய்ய முடியவில்லை.

வாடிக்கையாளர்களுடனும் வணிக கூட்டாளிகளுடனும் மனிதர்கள் உருவாக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏஐ-ஆல் உருவாக்க முடியவில்லை. முடிவுகள் எடுக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகள் கையாளும் திறன் ஏஐ-க்கு வரவே இல்லை என்கின்றன நிறுவனங்கள். இதனால் தான் மீண்டும் மனிதர்களையே இந்நிறுவனங்கள் தேட தொடங்கியுள்ளன.எனவே எதிர்காலம் என்பது மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ என்பது அல்ல, மாறாக, ஏஐ உடன் மனிதர்கள் இணைந்து எப்படி செயல்படுவது என்பதை புரிந்துகொள்வதில்தான் நிறுவனங்களின் வெற்றி அடங்கியுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+