இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கான வரன் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் என இரண்டுமே மிகப்பெரிய சந்தை என கூறலாம். நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் முறையும் பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது .
பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும் செயலிகள் வாயிலாகவும் திருமண வரன் பார்ப்பது என்பது மிகவும் எளிதாகி விட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பமும் இந்த மேட்ச் மேக்கிங் துறையில் கால் பதித்திருக்கிறது. பொதுவாக நாம் திருமணத்திற்கு வரன் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் நம்முடைய அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டி இருக்கும். இதனை அடுத்து நமக்கான தேவைகளை குறிப்பிட்டு ஃபில்டர் செய்து வரன் பார்க்க வேண்டும்.

ஆனால் Knot.dating என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய வரன் பார்க்கும் இணையதளம் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் செயல்படுகிறது. சமூக வலைதளங்களில் இது பற்றி தான் பலரும் தீவிரமாக விவாதம் நடத்தி வருகின்றனர். Knot.dating என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திருமண வரன் பார்க்கக் கூடிய தளத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய ஆண்கள் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியுமாம்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் இளைஞர்களின் வருமானம் , பின்னணி உள்ளிட்டவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் அவர்களுடைய விவரங்களே செயலியில் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இதில் வரன் தேடி பதிவு செய்ய எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இந்த இணையதளம் ஹார்வர்டு பல்கலைகழகம், பிட்ஸ் பிலானி, ஐஐடி, ஐஐஎம், காம்பிரிட்ஜ் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பயின்றவர்களே எங்களின் கிளைண்டுகள் என தெரிவித்துள்ளது.

தீவிரமாக வரன் பார்க்கக் கூடிய நபர்களுக்காகவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என இதன் நிறுவனர்களான ஜஸ்வீர் சிங் மற்றும் அபிஷேக் ஆஸ்தானா ஆகியோர் தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் எலைட் பிரிவினரை குறி வைத்து இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாம். டைம் பாஸுக்காக இல்லாமல் சீரியஸாக வரன் தேடுவோரை இலக்காக வைத்து ஏஐ உதவியுடன் செயல்படும் வகையில் இதனை வடிவமைப்பு செய்துள்ளனர்.
பாரம்பரிய வரன் பார்க்கும் இணையதளங்களில் இருந்து Knot.dating முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. நாம் இந்த செயலி அல்லது இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யும் போது எந்த விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை, இதில் இருக்கும் ஏஐ ஏஜெண்டுடன் சில நிமிட கலந்துரையாடினாலே போதும். நம் தேவைகளை உணர்ந்து அதற்கு பொருத்தமான வரன்களை பார்த்து கொடுக்கும் என ஜஸ்வீர் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ஆண்கள் மட்டுமே இதில் பதிவு செய்யு முடியும் என்பது தான் சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. பலரும் இது பின்னோக்கிய சிந்தனை என கருத்து கூறியுள்ளனர். ஆனால் இதன் நிறுவனர்கள் எலைட் பிரிவினரே எங்களின் இலக்கு என்பதாலும் , மணமகள் குடும்பத்தினருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதாலும் இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications