ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெருமளவில் பயன்பட்டாலும் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளும் அதிகரிக்கத் தான் செய்கிறது. கடந்த வாரம் ஓபன் AI நிறுவனம் GPT 4O-வில் ஒரு முக்கியமான அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது ஜிப்ளி ஸ்டைலில் படங்களை உருவாக்க இது பயன்பட்டது. இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 70 கோடிக்கும் அதிகமான படங்களை உருவாக்கியுள்ளது. தற்போது இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சாட் ஜிபிடி-யின் புதிய திறன்கள் பற்றிய விழிப்புணர்வு பரவ தொடங்கியதிலிருந்து.. இதைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
சமூக ஊடகப் பயனர்கள் பலர் சாட் ஜிபிடியின் புதிய பட உருவாக்கும் அம்சத்தை வைத்து தங்கள் புகைப்படங்களை கொண்டே போலியான ஆதார் கார்டுகளை உருவாக்க தொடங்கியுள்ளனர்.

தவறான நபர்களிடம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது குறித்த விவாதங்கள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சாட் ஜிபிடியின் புதிய அம்சமான போட்டோரியலிஸ்டிக் படங்களை உருவாக்குவதுதான் தற்போதைய ட்ரெண்ட்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் போட்டோக்களை பார்த்துவிட்டு சாட் ஜிபிடி மூலமாக ஆதார் கார்டு போன்ற படத்தை உருவாக்க முயற்சி செய்தோம். முடிவுகள் உண்மையாகவே ஆதார் அட்டைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.
சில X தள பயனர்கள் இந்திய அடையாள அட்டையான ஆதார் கார்டில் ஓபன் AI-யின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஆகியோரின் படங்களை வைத்து, கியூஆர் குறியீடுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து ஆதார் கார்டு உருவாக்கி பகிர்ந்துள்ளனர். ஆதார் கார்டு மட்டுமல்ல சாட் ஜிபிடி போலியான பான் கார்டுகளையும் உருவாக்குகிறது.

முன்னதாக, சாட் ஜிபிடி போன்ற சாட்போட்கள் படங்களை உருவாக்க DALL-E 3-ஐ சார்ந்திருந்தன. அதாவது நீங்கள் ஒரு படத்தைப் பற்றி சாட் ஜிபிடியிடம் கேட்டால், அது உங்கள் கோரிக்கையை DALL-E 3 போன்ற ஒரு தனிப்பட்ட AI அமைப்புக்கு அனுப்பும். அந்த அமைப்பு படத்தை உருவாக்கி சாட் ஜிபிடிக்கு திருப்பி அனுப்பும். பின்னர் சாட் ஜிபிடி அதை உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் GPT 4O-வில் உள்ள புதிய அம்சம் என்னவென்றால், படங்களை உருவாக்கும் திறன் அவற்றிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பட உருவாக்கும் திறன் தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும் இதன் மூலம் பயனர்கள் தவறாக பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த புதிய தொழில்நுட்பம் போலியான தகவல்கள் அடையாளத் திருட்டு மற்றும் பிற தீங்கு விளைவுக்கும் செயல்களுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications