AI மிக ஆபத்தானது, மக்களின் வேலைகளை பறித்து எலான் மஸ்கை பணக்காரனாக்கும்: AI காட்ஃபாதர் எச்சரிக்கை

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு நொடியும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நிறுவனங்களிலும் மனிதர்கள் பார்த்து வந்த வேலையை ஏஐ தொழில்நுட்பங்கள் மேற்கொள்ள தொடங்கிவிட்டன. பலரும் தங்களுடைய அன்றாட வேலைகளிலே கூட ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியை பெற தொடங்கி விட்டார்கள்.

காட்ஃபாதர் ஆஃப் ஏஐ என அழைக்கப்படும் ஜெஃபிராய் ஹிண்டன் ஏஐ தொழில்நுட்பத்தால் ஒரு மோசமான எதிர்காலம் உருவாக போவதாக எச்சரித்துள்ளார். கணினி அறிவியல் விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜெஃபிராய் ஹிண்டன் ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என கூறியிருக்கிறார்.

AI மிக ஆபத்தானது, மக்களின் வேலைகளை  பறித்து எலான் மஸ்கை பணக்காரனாக்கும்: AI காட்ஃபாதர் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழக்கப் போகிறார்கள் என்ற எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கும் அவர் உண்மையான ஆபத்து என்பது ஏஐ தொழில்நுட்பத்தில் கிடையாது இந்த சமூகம் அதனை எப்படி பயன்படுத்த போகிறது என்பதில் தான் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்கிறது வேகமாக மாறுகிறது இதனால் லட்சக்கணக்கான சாதாரண மக்கள் வேலை இழப்பார்கள், ஆனால் எலான் மஸ்க் போன்ற டெக் துறை தலைவர்கள் மேலும் மேலும் பணக்காரனாக போகிறார்கள் என தெரிவித்திருக்கிறார். மைக்ரோசாப்ட் , கூகுள், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தில் தங்களுடைய மூலதன செலவினத்தை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார் .

பெரிய நிறுவனங்கள் ஏஐ மூலம் அதிக வருமானம் பெறும் ஆனால் அந்த வருமானம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சென்று சேர போகிறது சாதாரண மக்கள் வேலையும் இழப்பார்கள் வருமானத்தையும் இழப்பார்கள் என கூறி இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இயல்பாகவே ஆபத்தானது அல்ல ஆனால் அதன் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மிகப் பெரிய சமூக சீர்குலைவை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

AI மிக ஆபத்தானது, மக்களின் வேலைகளை  பறித்து எலான் மஸ்கை பணக்காரனாக்கும்: AI காட்ஃபாதர் எச்சரிக்கை

ஏஐ-யின் சாத்தியமான அபாயங்களை அவர் செர்னோபில் நிகழ்வுடன் ஒப்பிடுகிறார் . ஏஐ வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது ஆனால் அதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என கூறுகிறார். கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத்தில் பெரிய பேரழிவுகளையும் விளைவுகளையும் உண்டாக்கும் என கூறும் அவர் ஏஐ-ஆல் ஏற்படக்கூடிய அபாயங்கள் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

எலான் மஸ்க் போன்றவர்கள் ஏஐ மூலம் பெறும் பணக்காரர்கள் ஆவார்கள் ,லட்சக்கணக்கானவர்கள் வேலை இழப்பதையோ இந்த சமூகம் சீரழிவது குறித்தோ அவர்கள் துளியும் கவலைப்பட மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார்.ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பெரிய அளவிலான நன்மைகளையும் செய்யக்கூடியது பெரிய அளவிலான தீமைகளையும் செய்யக் கூடியது என்பதால் அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் அதனை ஒழுங்கு படுத்துவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

தொழிலாளர் பாதுகாப்பு , ஏஐ மூலம் உருவாக்கப்படக்கூடிய பொருளாதாரம், மனித மதிப்புகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அரசுகள் வேகமாக சிந்திக்க வேண்டும் என கூறியிருக்கும் அவர் தற்போது இருந்தே அந்த அபாயங்களை நாம் அனுபவிக்க தொடங்கி விட்டோம் என தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+