ஐடி மற்றும் டெக் சேவை துறையை தாண்டி தற்போது பெரும்பாலான துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை ஆட்டோமேஷன் செய்வது இயல்பாகிவிட்டது. அப்படி ஏஐ ஆட்டோமேஷன் மூலம் பலரின் பணியை எளிதாக்கிய ஒரு நபருக்கு நேர்ந்த விஷயத்தை சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த ஊழியர் பகிர்ந்துள்ள தகவல் படி, ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் நான் Weekly Report கொடுக்க வேண்டும். இந்த ரிப்போர்ட் உருவாக்க பல இடத்தில் தகவல்களை சேகரித்து, அதை உரிய பார்மெட்டில் செட் செய்து சமர்பிக்க வேண்டும். இந்த ரிப்போர்ட்டை தயாரிக்க குறைந்தது 15 மணிநேரம் செலவிட வேண்டியிருக்கும்.

ஒரே வேலையை ஒவ்வொரு வாரமும் செய்வது மிகவும் கடுமையானதாக மாறிய நிலையில், நான் ஒரு வீக்எண்டில் இந்த Weekly Report தயாரிக்கும் பணியை ஏஐ மூலம் ஆட்டோமேட் செய்ய முடிவு செய்தேன், இதற்காக தனி ஸ்கிரிபிட் எழுதினேன், விளைவு 15 மணிநேர வேலையை ஒரு நிமிடத்தில் முடிக்க முடிந்தது.
இந்த ஆட்டோமேட் பணி சரியாக நடக்கிறதா என்பதை ஒரிரு வாரங்கள் கண்காணித்தார் அந்த ஊழியர், இந்த இடைப்பட்ட காலத்தில் இதர சில திறன்களையும் வளர்த்துக்கொண்டார். அடுத்து நடத்து தான் டிவிஸ்ட்..
இந்த ஊழியர் தனது ஏஐ ஆட்டோமேஷன் பணியை தனது மேனேஜரிடம் சொன்னால் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் என எதிர்பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. 15 மணிநேர வேலையை 1 நிமிடத்தில் செய்ய முடியும் என்பதை நிர்வாகம் உணர்ந்த நிலையில் ஊழியர்கள் செய்யும் வேலையை மதிக்காமல் கூடுதல் வேலையை கொடுக்க துவங்கியது.
இதேபோல் அனைவரும் ஏஐ ஆட்டோமேஷன் செய்ய வேண்டும் என்பது நிறுவனத்தில் அடிப்படை விஷயமாகவும் மாறியதாகவும் அந்த ஊழியர் புலம்பினார்.
உதாரணமாக சீனியர் ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறினால் அவரின் இடத்தில் புதிதாக நபரை தேர்வு செய்யாமல் மற்றவர்களுக்கு அவரின் வேலையை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு ஊழியரும் ஏஐ ஆட்டோமேஷன் மூலம் அவர்களின் வேலையை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதாகவும் அந்த ஊழியர் கூறினார்.
இதேபோல் ஆட்டோமேஷன் செய்த ஊழியருக்கு நிறுவனத்தின் மற்ற அணியில் இருந்தும் பல்வேறு கோரிக்கை வந்தால் அவர்களுக்கும் உதவ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் ஒரு வாரம் 50 மணிநேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனத்தில் உருவாகியுள்ளதாக கூறுகிறார்.
இதனால் ஏஐ ஆட்டோமேஷன் செய்த ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம், பதவி உயர்வு போன்றவை எதுவும் கொடுக்காமல் கூடுதல் பணி சுமையை மட்டுமே கொடுத்துள்ளதால் சோகத்தில் மூழ்கினார்..
இத்தகைய சூழ்நிலையை ஒவ்வொரு ஊழியருக்கும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.. ஏஐ மூலம் ஒரு பணியை வேகமாகவும், திறம்படவும் ஒரு வேலையை முடித்தால்.. நிறுவனம் கூடுதல் வேலையை ஒதுக்க வேண்டுமா அல்லது ஊழியரின் திறன் வளர்ப்பு, சம்பளத்தில் உயர்வு போன்றவை வழங்க வேண்டுமா..?
இந்த பதிவு சமுக வலைத்தளத்தில் பெயர் இல்லாமல், நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஊழியர்களுக்கு இருக்கும் கேள்வி இதுதான். ஏஐ ஆட்டோமேஷன் ஊழியர்களின் பணி சுமையை குறைத்து திறனை மேம்படுத்தானாலும், நிறுவனங்கள் கூடுதல் சுமையை கொடுத்து வருவது பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications


