உலகமே உற்றுநோக்கும் டெல்லி செயற்கை நுண்ணறிவு (AI) உலக மாநாட்டு கண்காட்சியில், ஒரு சீன ரோபோ நாயைத் தங்களுடைய படைப்பு என்று கூறி, இந்திய பல்கலைகழகம் ஒன்று ஏமாற்றி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தை (கிரேட்டர் நொய்டா), கண்காட்சி தளத்தில் இருந்து காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முதல்கட்டமாக, உச்சிமாநாட்டின் கல்கோட்டியாஸ் ஸ்டாலுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்டாலில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கண்காட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் சர்ச்சைக்குள்ளான வைரல் வீடியோவில், இந்த பல்கலைகழக பேராசிரியர் நேஹா சிங் ஒரு ரோபோ நாயை "ஓரியன்" என்று அறிமுகப்படுத்தி, "இதை கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உருவாக்கியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த ரோபோ கண்காணிப்பு பணிகளைச் செய்யக்கூடியது என்றும், வளாகத்தில் சுதந்திரமாக நடமாடும் என்றும் அவர் விவரித்தார்.

இந்த வீடியோ வெளியான உடனேயே, பார்வையாளர்கள் பலர், இந்த ரோபோ நாய் உண்மையில் ஒரு சீன ரோபோடிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீயிடமிருந்து (Unitree) பெறப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் உடனடியாக ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டது, அதில் தாங்கள் இந்த ரோபோ நாயைத் தயாரித்ததாக ஒருபோதும் உரிமை கோரவில்லை என்று குறிப்பிட்டது.
பல்கலைக்கழகம் தனது அறிக்கையில், "கல்கோட்டியாஸ் இந்த ரோபோ நாயை உருவாக்கவில்லை, அவ்வாறு உரிமை கோரவும் இல்லை. மாறாக, இந்தியாவில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்யக்கூடிய எதிர்கால தலைமுறையினரை நாங்கள் உருவாக்குகிறோம்," என்று தெளிவுபடுத்தியது.
செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனம் மீதான தவறான கருத்துக்களால் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகவும் வருந்துவதாகத் தெரிவித்தது. மாணவர் கற்றல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மீது தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
"மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை அணுகவும், அதன்மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெறவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் நாங்கள் வழிவகுக்கிறோம். எதிர்மறை தகவல்களைப் பரப்புவது, உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்து, கற்றுக்கொண்டு, தங்கள் திறமைகளை வளர்த்து வரும் மாணவர்களின் மன உறுதியை பாதிக்கும்," என்று அந்த பல்கலைகழகம் கூறியது.
யூனிட்ரீ ரோபோடிக்ஸ் தயாரிக்கும் "ரோபோ நாய்கள்" என்பவை, உண்மையான விலங்குகளைப் போலவே நான்கு கால்களால் நடக்கவும், நகரவும் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட ரோபோக்கள் ஆகும். தடைகளைத் தாண்டுவது முதல் தொழில்துறை தளங்களை ஆய்வு செய்வது, மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடு வரை பல பணிகளை இவை செய்யக்கூடியவை.
யூனிட்ரீ என்பது சீனாவைச் சேர்ந்த ஒரு ரோபோடிக்ஸ் நிறுவனமாகும். பாஸ்டன் டைனமிக்ஸின் 'ஸ்பாட்' போன்ற பல போட்டியாளர்களை விட குறைந்த விலையில் இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்து, எளிதாகக் கிடைக்கச் செய்வதில் இது உலகளவில் அறியப்படுகிறது. இந்த ரோபோவை இந்த பல்கலைகழகம் தங்களின் தயாரிப்பை போல அறிமுகம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications