தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்கள் செய்யும் வேலைகளை பறித்துக் கொள்ளுமோ என்ற பயம் உலகம் முழுவதும் உள்ளது. இந்த மாற்றம் நாம் நினைத்ததை விட மிக விரைவாக வரக்கூடும் என்றும், இந்தியாவில் உள்ள வேகமாக வளரும் சந்தைகளில் கூட இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, இந்தியாவின் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையில் ஒரு மிகப் பெரிய AI ஆதிக்கம் வரவிருக்கிறது. தற்போதைய நிலையில், வாடிக்கையாளர் சேவை துறையில் உள்ள சுமார் 30% பணிகளை AI நிர்வகிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சேல்ஸ்ஃபோர்ஸ் அறிக்கையின்படி, வரும் 2027 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள மொத்த வாடிக்கையாளர் சேவைப் புகார்களில் பாதிக்கும் மேற்பட்ட (50%) பணிகளை செயற்கை நுண்ணறிவு கையாளும். அதாவது, AI-இன் பயன்பாடு வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதுதான் முக்கிய இலக்காக இருந்தாலும், AI-ஐப் பயன்படுத்துவது இப்போது இரண்டாவது மிக முக்கிய நோக்கமாக மாறிவிட்டது.
மனிதர்களுக்கு இனி கடினமான வேலைகள் :இந்த ஆய்வின்படி, வாடிக்கையாளர் சேவை பணியாளர்கள், தினமும் செய்யும் சலிப்பான மற்றும் திரும்பத் திரும்ப வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலைகளை AI எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம், மனித ஊழியர்கள், சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய, உணர்வுபூர்வமாகப் பேச வேண்டிய அல்லது தீர்க்கமான ஆலோசனை தேவைப்படும் உயர் மதிப்புள்ள பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும்.
அதாவது, AI எளிமையான வேலைகளை முடிக்கும். மனிதர்கள் நுணுக்கமான பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். இந்த மாற்றம் காரணமாக, AI உடன் இணைந்து வேலை செய்பவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர் (சுமார் 69%). அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, முக்கியமான பணிகளைக் கையாள்வதால் இந்த நம்பிக்கை பிறக்கிறது.
லாபம் மற்றும் சவால்கள் : AI-ஐ பயன்படுத்துவதால் நிறுவனங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரிப்பது, புதியவர்களை விரைவாக வேலைக்குத் தயார் செய்வது, பணி திருப்தி உயர்வு மற்றும் விற்பனை வருமானத்தில் 16% வரை அதிகரிப்பு போன்ற பலன்கள் கிடைக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. இந்த முன்னேற்றங்கள் ஃபின்டெக், இ-காமர்ஸ் போன்ற வேகமான துறைகளில் அதிகமாகத் தெரிகின்றன.
இருப்பினும், கவலைகளும் உள்ளன. இந்திய சேவை தலைவர்களில் பாதி பேர், பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக AI கருவிகளை முழுமையாக பயன்படுத்துவதை தாமதப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், வாடிக்கையாளர் கேள்விகளுக்கு AI அளிக்கும் பதில்களின் துல்லியம் குறித்தும் சிலருக்கு கவலை இருக்கிறது.
இருப்பினும், AI மீதான நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. வாய்ஸ் AI பயன்படுத்தும் நிறுவனங்களில் 90% பேர், AI முகவர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வாடிக்கையாளர்களை மாற்றும் பணி, எந்த தடையுமின்றி நடப்பதாக கூறியுள்ளனர். மேலும், 44% குழுக்கள் எழுத்து, குரல் மற்றும் படங்கள் ஆகிய மூன்றையும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட மல்டிமாடல் AI கருவிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இது, மேம்பட்ட AI கருவிகளை நோக்கித் துறை நகர்வதை காட்டுகிறது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications