யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் குறுகிய கால வீடியோக்களை மக்கள் பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. 1நிமிடத்துக்குள் இருக்கும் வீடியோக்களை மட்டுமே மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். இது Content creator economy என்ற ஒரு பொருளாதார பிரிவையே உண்டாக்கி இருக்கிறது.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு என சேனலை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிடுகிறார். வீடியோக்களுக்கு கிடைக்கும் பார்வைகளுக்கு ஏற்ப இந்த தளங்களில் வருமானமும் கிடைக்கிறது. தற்போது இதில் ஏஐ ஆதிக்கம் அதிகமாகி விட்டது.

ஏஐ செயலிகளை பயன்படுத்தி நம்முடைய கற்பனைகளை எல்லாம் நம்மால் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் மாற்றிக் கொள்ள முடிகிறது . என்னதான் ஏஐ பயன்படுத்தி கன்டென்ட் கிரியேட் செய்தாலும் குறிப்பிட்ட சிலர் தான் இதில் வெற்றி பெற முடிகிறது. அப்படி யூடியூபில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சேனல் 35 கோடி வருமானம் ஈட்டி வருமானம் ஈட்டி அனைவரையும் திக்கு முக்காட வைத்திருக்கிறது.
தற்போது யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தங்களுக்கு என சொந்தமாக சேனலை உருவாக்கி அதன் மூலம் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பலரும் வருமானம் ஈட்டுகிறார்கள் . பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் ஆகியவை மாறியிருக்கக்கூடிய சூழலில் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கு இது பெரிய அளவில் வருமானம் ஈட்டி தரும் தளங்களாக மாறியிருக்கின்றன.

இந்த நிலையில் பெரிதாக எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல் ஏஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு youtube சேனல் தற்போது இந்தியா முழுவதும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. குறைந்த தரம் கொண்ட ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட கன்டென்ட்களை AI Slop என அழைக்கிறார்கள். அப்படி ஒரு ஏஐ ஸ்லாப் சேனல் தான் பந்தர் அப்னா தோஸ்த் (Bandar Apna Dost). அதாவது ஏஐ மூலம் ஒரு குரங்கு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதில் வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
இந்த யூடியூப் சேனலை 2.76 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்து இருக்கிறார்கள். 619 வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன இந்தியாவில் AI Slop பிரிவில் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்ட ஒரு யூடியூப் சேனலாக இது மாறி இருக்கிறது என்பதுதான் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது . ஏஐ மூலம் மட்டுமே இதில் வீடியோ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருமானம் ஈட்டப்படுகிறது.
உலகம் முழுவதும் இப்படி AI Slop பிரிவு வீடியோக்கள் கொண்ட மொத்தம் 278 சேனல்கள் உள்ளன. இவற்றுக்கு 221 மில்லியன் சப்ஸ்கிரைபர்களும் 63 பில்லியன் வியூஸ்களும் வந்திருக்கின்றன. Kapwing என்ற தளம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications