செயற்கை நுண்ணறிவு (AI) துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. தற்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. இதில், மனிதர்களின் வேலைகளை இயந்திரம் தானாகச் செய்கின்ற நோக்கத்தில் புதிய நிறுவனங்கள் பல தோன்றுகின்றன. அந்த வகையில், Tamay Besiroglu என்ற AI ஆராய்ச்சியாளர் "Mechanize" என்ற புதிய ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், மனிதர்களால் செய்யப்பட்டு வரும் வேலைகளை AI மூலம் முழுமையாக தானாகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனம், டிஜிட்டல் பணி சூழல்கள்(Digital work environments) எனப்படும் விர்ச்சுவல் வேலை(Virtual work) சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இதில், மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், எதை எதிர்கொள்கிறார்கள், எந்த சிக்கல்களை சமாளிக்கிறார்கள் என்பதனை AI கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது. இது AI ஏஜெண்டுகள் நிஜ வாழ்க்கை வேலைகளை புரிந்துகொண்டு, அவற்றை தானாகச் செய்ய கற்றுக்கொள்ள உதவுகிறது.

Mechanize நிறுவனம் கூறுவது என்னவென்றால், உலகம் முழுவதும் சாதாரண வேலைகளை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பை AI மூலம் மாற்றுவது தான் எங்கள் நோக்கம் என்று கூறுகின்றனர். மேலும், இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், உலகில் செழிப்பை உருவாக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. தற்போது, உலகம் ஆண்டுக்கு சுமார் 60 டிரில்லியன் டாலர்களை தொழிலாளர் செலவுகளுக்காக செலவிடுகிறது. இதுவே AI தனியாக செயல்படும் போது, புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த முயற்சி பலரிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. X போன்ற சமூக ஊடகங்களில், "நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்பதற்காகவே அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. இது மனிதகுலத்திற்கு நல்லதல்ல" என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், இது மிக அபத்தான நோக்கமாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிலர், இது எல்லா விஷயங்களையும் செய்யும் புத்திசாலியான AI இல்லை. ஒரே ஒரு வேலை செய்யும் சிறப்பு AI என்பதால் இது நல்லது என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
Mechanize நிறுவனம் முயற்சி செய்யும் இந்த திட்டம், தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான ஒரு கட்டமாக அமையும். ஆனால் இது உண்மையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துமா? அல்லது பலருக்கு வேலை இழப்பை ஏற்படுத்துமா? என்பது எதிர்காலத்தில் தான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications