உலகையே புரட்டிப்போட்ட AI தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த முதலீட்டாளர்கள், தற்போது மாறி மாறி கேள்வி எழுப்பி வரும் காரணத்தால் மொத்த கதையும் தலைகீழாக மாறுகிறது என்றால் மிகையில்லை.
தற்போது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் ஏஐ தொழில்நுட்பத்திற்காகச் செலவிடப்படும் பெரும் தொகையின் மூலம் குறுகிய காலத்தில் எப்படி லாபம் ஈட்ட முடியும் என்ற சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக ஏஐ, சிப், டெக் என 3 பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனப் பங்குகளும் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக ஏஐ சார்ந்த, ஏஐ எகோசிஸ்டத்துடன் தொடர்புடைய, ஏன் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஏஐ என் பெயர் வைத்திருந்தாலே முதலீடுகள் தாறுமாறாகக் குவியத் துவங்கியது.
உலகளவில் அனைத்து பங்குச்சந்தையும், பங்குச்சந்தை முதலீடுகளும் ஏஐ சார்ந்து மட்டுமே இருந்தது, இதன் மூலம் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள் தற்போது வேகமாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வெளியேறத் துவங்கியுள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் காலாண்டு முடிவுகளை வெளியிடும் காலகட்டம் என்பதால் கூகுள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அமேசான் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்திற்காகவும், அதன் உள்கட்டமைப்புக்காகவும் பல நூறு பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து வரும் வேளையில், இந்த முதலீடுகள் மூலம் போதுமான வருமானம், லாபம் வருகிறதா என்பதை முதலீட்டாளர்களுக்கு காட்ட முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
உதாரணமாக அமேசானின் 220 பில்லியன் டாலர் செலவினம், கூகுளின் லாபத்தில் ஏற்பட்ட சரிவு, இன்டெல் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வர்த்தகத்தைக் காட்டிலும் குறைவான அளவீட்டை PC வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளது.
தற்போது ஏஐ கட்டமைப்புக்காக அதிகம் செலவிடும் அமேசான், மைக்ரோசார்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்களும் சரி, ஏஐ தொழில்நுட்பத்திற்காக சிப் தயாரிக்கும் என்விடியா, TSMC, சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஆசியாவில் இருக்கும் சிப் நிறுவனப் பங்குகள் 1.8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக ஜப்பான் நாட்டின் Advantest Corp பங்குகள் 6 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications