Salesforce Layoff: உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான Salesforce நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் பெனியோப் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 4,000 கஸ்டமர் சப்போர்ட் பணியாளர்களை நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
இதனால் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் 9,000 பேராக இருந்த கஸ்டமர் சப்போர்ட் பணியாளர்களின் எண்ணிக்கை 5,000-ஆக குறைந்துள்ளது. இந்த மெகா பணிநீக்கத்திற்கு முழு முக்கிய காரணமாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம். மார்க் பெனியோப்-ன் இந்த அறிவிப்பு டெக் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

கடந்த சில மாதங்களாக மார்க் பெனியோப் சமுக வலைத்தளத்திலும், பொது கூட்டங்களிலிலும் ஏஐ குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தை தனது நிறுவனத்தில் பெரிய அளவில் பயன்படுத்த முடிவு செய்த மார்க் பெனியோப் தற்போது 4000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இனி வரும் காலக்கட்டத்தில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பரிவில் அதிகளவிலான பணிகளை AI ஏஜெண்ட் தொழில்நுட்பம் மேற்கொள்ளும். பணிநீக்கம் செய்யப்பட்ட 4000 ஊழியர்களின் பணியை இனி ஏஐ கையாளும், மேலும் இப்பிரிவில் அடுத்த சில வாரத்தில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடக்க உள்ளது.
இந்த பணிநீக்கம் மூலம் Salesforce இப்பிரிவில் சுமார் 45 சதவீதம் பணியாளர் குறைக்கப்பட்டு உள்ளதாக பெனியோப் Logan Bartlett பாட்காஸ்டில் தெரிவித்தார்.
இனி வரும் காலக்கட்டத்தில் Salesforce-இன் AI ஏஜெண்ட்கள் வாடிக்கையாளர் சேவை தாண்டி, சேல்ஸ் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன, இது பெரிய அளவிலான தேங்கி கிடக்கும் பணிகை முடிக்க முக்கியமான தீர்வாக உள்ளது என தெரிவித்துள்ளது.
பெனியோப் தெரிவித்தபடி, என்னுடைய நிறுவனத்தில் கடந்த 26 ஆண்டுகளில் 1 கோடியே 10 லட்சம் அழைக்கப்படாத சேல்ஸ் அழைப்புகள் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. இப்பிரிவில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் இந்த தேக்கம் ஏற்பட்டது.

ஆனால் இப்போது ஏஐ உதவியுடன் "ஒம்னிசேனல் சூப்பர்வைசர்" என்ற அமைப்பு மூலம் AI மற்றும் மனித ஊழியர்களுக்கு மத்தியிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த AI ஏஜெண்ட், ஒரு வாடிக்கைாளர் சேவை பிரச்சனை அல்லது சேல்ஸ் காலில் எப்போதெல்லாம் மனித தலையீடு தேவைப்படுகிறதோ அதை உடனடியாக அடையாளம் கண்டு, தேவைப்படும் போது மனிதர்களுக்கு இப்பணியை மாற்றுகிறது. இந்த மாற்றம், விற்பனை செயல்முறையை சிறப்பாக்கி, வேகப்படுத்தி , நிறுவனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்தியுள்ளது என Salesforce நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் பெனியோப் தெரிவித்துள்ளார்.
மார்க் பெனியோப் இந்த பாட்காஸ்ட்டில் "என் வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான 8 மாதங்கள்" என்று ஏஐ ஏஜெண்ட் அறிமுகம் செய்த காலக்கட்டத்தை குறிப்பிட்டு உள்ளார். தற்போதைய நிவையில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவையில் 50 சதவீதத்தை ஏஐ கையாள்கின்றன, மீதமுள்ள 50 சதவீதத்தை மனித ஊழியர்கள் நிர்வகிக்கின்றன என தெரிவித்தார்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications