செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பல துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கும் என பல மாதங்களாக பேசப்பட்டு வந்தாலும், இந்த பாதிப்பு சில வருடங்களுக்கு இருக்காது என பல தரப்பினர் கணித்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில், AI மூலம் 4000 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
சர்வதசே அளவில் இயங்கி வரும் HR நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையின் படி, இந்த ஆண்டு மே மாதத்தில் தோராயமாக 4000 பேர் தங்களுடைய வேலையை இழக்க செயற்கை நுண்ணறிவு (AI) காரணம் என அறிவித்துள்ளது.

CGC நிறுவனத்தின் கணக்குகளின் படி மே மாதத்திற்கான மொத்த பணிநீக்கத்தில் 4000 பேரின் பணிநீக்க பங்கீடு 4.9 சதவீதம் ஆகும். இந்த பணிநீக்கம் இந்த துறையில் தான் உள்ளது என குறிப்பிட முடியாத அளவுக்கு அனைத்து துறைகளிலும் உள்ளன என்று இந்நிறுவன அறிக்கைகள் கூறுகிறது.
சமீபத்தில் உலகிலேயே மிகவும் பழமையான மென்பொருள் நிறுவனங்களில் இன்றும் வெற்றிகரமாக இயங்கும் IBM நிறுவனத்தின் CEO-ஆன அரவிந்த் கிருஷ்ணா ஒரு நேர்காணலில் நிறுவனம் 6800 வேலைவாய்ப்புகளை காலப்போக்கில் AI மூலம் படிப்படியாக அகற்றும் என தெரிவித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இதை தொடர்ந்து அமெரிக்காவில் சில முன்னணி செய்தி நிறுவனங்கள் AI சேவைகளை பயன்படுத்தி அதிகப்படியான செலவுகளை குறைக்க முடியும் என்பதை பல பிரிவுகளில் ஆய்வு செய்து தீர்மானத்திற்கு வந்த நிலையில், பலர் பணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றால் மிகையில்லை.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையில் அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 417,500 பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். 2020 க்குப் பிறகு வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் மோசமான ஐந்து மாத காலகட்டமாக உள்ளது.

இந்த போக்கு அடுத்த சில வருடங்களில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட உள்ளது மட்டும் அல்லாமல் பலர் இதனால் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். குறிப்பாக கீழ் மட்டத்தில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் தங்களுடைய பணியை இழக்க வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications