இந்திய IT சேவை துறையின் சந்தை மதிப்பு கடந்த 30 நாட்களில் 50 பில்லியன் டாலர் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஏஐ நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற துவங்கியிருக்கும் வேளையிலும், சிட்ரினி ஆய்வு அறிக்கை இந்திய ஐடி பங்குகளின் மதிப்பு இன்னும் அதிகளவில் சரியும் என கணித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 24) நிஃப்டி IT குறியீடு 2% சரிந்தது, இன்போசிஸ் 3%, எல்&டி 2.5%, எச்சிஎல் 2.5%, டிசிஎஸ் 2.3%, டெக் மஹிந்திரா 2% வீழ்ச்சி கண்டுள்ளது. AI தொழில்நுட்பம் IT சேவை துறையின் வர்த்தக மாடலை உடைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது இந்திய பொருளாதாரத்துக்கு 10% GDP பங்களிப்பு அளிக்கும் IT துறையை பெரிதும் பாதிக்கும் என்பதை சிட்ரினி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

IT பங்குகள் சரிவின் பின்னணி
கடந்த 30 நாட்களில் நிஃப்டி IT குறியீடு -15%, விப்ரோ -25%, இன்போசிஸ் -25%, டிசிஎஸ் -17%, காக்னிசண்ட் -24%, எச்சிஎல் -17%, ஆக்சென்சர் -25%, கேப்ஜெமினி -30%, எல்டிஐ மைண்ட்ட்ரீ -25%, டெக் மஹிந்திரா -18%, எம்பாசிஸ் -20% சரிந்துள்ளன. இன்று மட்டும் நிஃப்டி IT குறியீடு2% சரிந்தது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
Citrini Research அறிக்கையின் படி இந்தியாவின் டாப் 3 ஐடி சேவை நிறுவனங்களாக இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் தனது டெக் ஒப்பந்தங்கள் ரத்தாகும் வேகம் அதிகரிக்கும் என கூறுகிறது.
மேலும் கடந்த 4 மாதத்தில் ரூபாய் மதிப்பு 18% சரிந்தது, மற்றும் ஐடி நிறுவனங்களின் அதிகப்படியான வர்த்தகம் ஆகியவை அதன் நிதி நிலையை கட்டுக்குள் வைத்தது, இத்துறைக்கு சாதகமாக அமைந்தது.
SAP ERP மைக்ரேஷன் (ECC to S4) பணியை ஐடி நிறுவனங்கள் செய்து முடிக்க பல ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். ஆனால் ஏஐ பயன்படுத்துவது மூலம் 2 வாரங்களுக்குள் இந்த பணியை முடித்துவிட முடியும் என Palantir நிறுவனம் கூறுகிறது.
AI தொழில்நுட்பத்தின் தாக்கம்
AI தொழில்நுட்பம், காலம் காலமாக பயன்பாட்டில் இருக்கும் IT சேவை மாடலை உடைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது உண்மையில் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி. கிளாட் கோவர்க் (Claude Cowork) போன்ற AI கருவிகளை இந்தியாவில் இருக்கும் GCCகள் மிக குறைந்த செலவில் இயக்க உதவுகின்றன. இது பல ஆண்டு IT சேவை ஒப்பந்தங்களை விட குறைவான செலவில் செய்து முடிக்க முடியும் என்பதால் தற்போது ஐடி நிறுவனங்களுக்கான தேவை இல்லாமல் போகிறது.
இந்திய IT சேவை துறை ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருளை ஏற்றுமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார பற்றாக்குறையை தீர்க்கும் முக்கிய துறையாக இருக்கும் வேளையில் AI தொழில்நுட்பத்தின் எழுச்சி மிகப்பெரிய பாதிப்பாக மாறி வருகிறது.
இதுநாள் வரையில் அமெரிக்க டெக் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகம் என்பதால் இந்திய டெக் ஊழியர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தது. தற்போது AI கோடிங் ஏஜெண்ட்களின் செலவு மின்சார செலவுக்கு சமமாக குறைந்துள்ளதால் ஏஐ லாபகரமாக மாறியுள்ளது.
இதனால் TCS, இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2027இல் ரத்தாகும் வேகம் அதிகரிக்கும் என சிட்ரினி கூறுகிறது. இதனால் இந்தியாவின் சேவை ஏற்றுமதி குறைந்து, ரூபாய் மதிப்பு மேலும் சரியலாம்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications