இணையவழி குற்றம் அல்லது சைபர் குற்றம் என்பது, இணையம் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோதச் செயல்களைக் குறிக்கிறது. இணையவழி குற்றங்களில், கணினி ஒரு இலக்காகவோ அல்லது குற்றச்செயலை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைய வழி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து,நேற்று தலைநகர் டில்லியில்,மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான பார்லிமென்ட் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையேற்றார்.இதில் "இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்" என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், போலி வங்கிக் கணக்குகளை கண்டறிந்து சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.போலி வங்கிக் கணக்குகளை தடுக்கும் நடவடிக்கைகள் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரை அடிப்படையில், 19 லட்சத்துக்கும் அதிகமான போலி வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.2,038 கோடி மதிப்புள்ள சட்டவிரோத பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.
மேலும், போலி வங்கிக் கணக்குகளை முற்றிலுமாக ஒழிக்க, ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. இந்த நடவடிக்கையை இன்னும் வலுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதற்காக ஒரு பிரத்யேக ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, 805 மொபைல் செயலிகள் மற்றும் 3,266 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள், நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) பரிந்துரைத்துள்ளது.டிஜிட்டல் வளர்ச்சி சைபர் குற்றங்கள் அதிகரிப்பு கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி வேகமாக வளர்ந்துள்ளது. இதன் விளைவாக, தற்போது நாட்டின் 95% கிராமங்கள் இணைய வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள் Wi-Fi ஹாட்ஸ்பாட் வசதியுடன் செயல்படுகின்றன.
இந்த டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, சைபர் குற்றங்கள் இயற்கையாகவே அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த, மென்பொருள் பாதுகாப்பு, பயனர் விழிப்புணர்வு மற்றும் சரியான கட்டுப்பாட்டு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
"நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்கும் இந்த முயற்சி, நாட்டின் இணைய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும். பாதுகாப்பான டிஜிட்டல் இந்தியாவுக்காக அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்!"
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications