5 வருஷத்துல AI உங்க வேலையை பறிச்சிடும்! உடனே கத்துக்கோங்க! டீப்மைண்டின் சிஇஓ சொல்வதை கேட்டீங்களா!

உலகம் வேகமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என்றே கூறலாம். அப்படி இருக்கையில் கூகுள் டீப் மைண்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான டெமிஸ் ஹசாபிஸ் டீனேஜர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் "இப்போதே கற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் பின்தங்கி விடுவீர்கள்!" என்பதுதான்.

டெமிஸ் கூகுள் நிறுவனத்தின் உயர்தர ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுக்கு பின்னால் இருக்கும் ஆராய்ச்சி ஆய்வகமான கூகுள் டீப்மைண்டை வழிநடத்தி வருகிறார். இந்த ஆய்வகத்தில் ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் (AGI) ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. அதாவது மனித நிலையை பகுத்தறியும் திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம்.

5 வருஷத்துல AI உங்க வேலையை பறிச்சிடும்! உடனே கத்துக்கோங்க! டீப்மைண்டின் சிஇஓ சொல்வதை கேட்டீங்களா!

உதாரணத்திற்கு எந்திரன் படத்தில் ரோபோட்டுக்கு மனித உணர்வுகளை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படும் விஷயம் கிடைத்துவிட்டால் அந்த ரோபோட் என்னென்ன செய்யும் என்று பார்த்தோம். அப்படித்தான் மனித உணர்வுகள், மனிதனைப் போலவே யோசிக்கும் திறன், மனிதர்களைப் போல கிரியேட்டிவிட்டியுடன் செயல்படும் திறன் ஆகியவற்றை கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தான் இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ்.

இதை அடைவதற்கு கூகுள் பல முயற்சிகளை செய்து வருகிறது. அதுவும் இந்த ஆய்வகத்தில் தான் செய்யப்படுகிறது. பொதுவாக நாம் தற்போது பயன்படுத்தும் AI தொழில்நுட்பம் பணிகளை செய்வதில் சிறந்த விளங்குகிறது, படங்களை அடையாளம் காண்கிறது, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கும் மொழிபெயர்க்கிறது. ஆனால் இது போன்ற ஏஐ அமைப்புகளுக்கு தங்கள் பயிற்சிக்கு அப்பால் சிந்திக்கவோ அல்லது கற்றுக் கொள்ளவோ முடியாது.

ஆனால் ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் இந்த விஷயத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இவை மனிதர்களைப் போலவே சிந்திக்கும், மனிதர்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் பல்வேறு துறைகளில் தனது அறிவை வைத்து சிக்கல்களை தீர்த்து செயல்படுகின்றனரோ அதேபோல இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் தொழில்நுட்பமும் செயல்படும்.

சமீபத்தில் நடந்த கூகுள் நிறுவனத்தின் "ஹார்ட் ஃபோர்க்" என்ற பிரபல பாட்காஸ்டில் பேசிய டீப் மைண்ட்-இன் CEO ஹசாபிஸ் இளம் தலைமுறையினருக்கு ஒரு முக்கியமான கருத்தைக் கூறினார். அவர் இளம் வயதினரிடம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முழுமையாக ஈடுபட ஊக்குவித்தார். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் என்றும் கூறினார்.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் சில வேலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதோடு இளைஞர்கள் AI கருவிகளுக்கு சீக்கிரமாக பழகிக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுரைகளை வழங்கினாலும் வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டுமே போதாது என்றும் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி பிற திறன்களிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

2030-ஆம் ஆண்டுக்குள் ஏஐ வேலை சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் சமீப காலமாக கூறி வருகின்றனர். அதற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்வது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+