இன்றைய ஐடி உலகில் நாம் எந்த திசையில் திரும்பினாலும் ஒரே ஒரு பேச்சு தான். அது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம். AI பயன்பாடு அதிகரித்ததில் இருந்து பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர், சந்திரசேகரன் அடுத்த 3 வருடங்களுக்குள் ஊழியர்களுக்கு இணையான AI ஏஜென்ட்களை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.
AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இந்தியாவில் ஏஐ ஒட்டுமொத்த வேலைகளையும் காலி செய்யாது. ஆனால் அதை விட மிகப்பெரிய ஆபத்து வருவதற்கு வாய்ப்புள்ளது.
பல வருடங்களாக இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே ஒரு விஷயத்தை தான் கூறிக் கொண்டிருக்கின்றனர். "நன்றாக படித்து ஒரு டிகிரியை வாங்கி IT வேலையில் சேர்ந்து விடு.. அதன் பிறகு லைஃப் செட்டில் ஆகிவிடும்" என்று.. இந்த விஷயத்தை தான் AI மெல்ல மெல்ல உடைத்துக் கொண்டிருக்கிறது. AI வந்ததன் காரணமாக ஒரு தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் தென்படுகிறது.

ஏனெனில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அதிக அளவில் AI ஏஜென்ட்களைப் பயன்படுத்த இருப்பதால், இந்த முறை ரெக்ரூட்மெண்ட் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படியானால் பாதிக்கப்பட போவது என்னவோ என்ட்ரி லெவல் ஊழியர்கள் தான். ஜூனியர் அனாலிஸ்ட், கோடர், டெஸ்டர், ப்ராசஸ் ஒர்க்கர் டாக்குமெண்டேஷன் டீம் போன்றவற்றில் பணிபுரியும் ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் வாய்ப்புள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல.. பிற நிறுவனங்களும் ஏஐ பயன்பாட்டை அதிகரித்தால் இதே தான் நிலைமை.
ஏஐ வேலை வாய்ப்பு சந்தையை 3 பிரிவுகளாக பிரித்து விடும். அதில் முதலாவதாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்த தெரிந்த ஊழியர்கள், சீனியர் மேலாளர்கள் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த இன்கிரிமெண்ட் கிடைத்து அவர்கள் அதிக சம்பளத்தில் பணிபுரிவார்கள்.
அதே நேரம் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருக்கும் சிலர் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற சர்வீஸ் செய்யும் வேலைகளுக்கு சென்று விடுவார்கள். ஏனெனில் இந்த வேலைகளை எப்போதுமே ஒரு சாப்ட்வேரை கொண்டு செய்ய முடியாது. அதனால் இந்த வேலைகள் அப்படியே இருக்கும். ஒருவேளை இது போன்ற வேலைகளை ரோபோக்களை வைத்து செய்ய வேண்டுமானாலும் அதற்கு அதிக ஆண்டுகள் எடுக்கும். இது போன்ற வேலைகளுக்கு உடல் உழைப்பு அதிகம், சம்பளம் குறைவாகவே இருக்கும்.
மூன்றாவதாக ஒரு நடுத்தர கல்லூரியில் படித்துவிட்டு வேலைக்கு செல்ல காத்திருக்கும் நபர்களுக்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும். கஸ்டமர் சப்போர்ட், டேட்டா என்ட்ரி போன்ற வேலைகளை மனிதர்களை விட ஏஐ மிக துல்லியமாக செய்து விடுகிறது. இதனால் நிறுவனங்கள் வேலைகளுக்கு ஆட்களை எடுப்பதை குறைத்து வருகின்றன. இப்படி இருப்பதால் பெரிய கல்லூரிகளில் படிக்காத அல்லது சுமாராக படித்த கோடிக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும்.
மெர்சர்ஸ் இந்தியா கிராஜுவேட் ஸ்கில் இண்டெக்ஸ் 2025 என்ற ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் இந்தியாவில் டிகிரி படித்துவிட்டு வெளியாகும் மாணவர்களில் வெறும் 42.60 சதவீதத்தினருக்கு மட்டும் தான் அவர்கள் எதிர்பார்க்கும் நிறுவனங்களில் சேரும் அளவிற்கு ஸ்கில் இருக்கிறது, மீதமுள்ள 57 சதவீதம் மாணவர்களிடம் டிகிரி சர்டிபிகேட் இருந்தும் வேலைக்கு தேவையான திறமை இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஆங்கிலம் நன்கு பேச தெரிந்த மாணவர்கள் மற்றும் பெரிய பெரிய நெட்வொர்க் பற்றிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஏஐ ஒரு சூப்பரான ஆயுதமாக மாறிவிடும். இது போன்ற மாணவர்கள் பெரிய உயரத்திற்கு போய்விடுவார்கள். ஆனால் அந்த அளவுக்கு வசதி இல்லாத கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் நிலைமை தான் இதில் கவலைக்கிடம். இவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதில்லை. இப்படி இருக்கும் மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் கஸ்டமர் சப்போர்ட், டேட்டா என்ட்ரி போன்ற வேலைகளில் சேர்ந்து பணிபுரிந்து வந்தனர். ஆனால் இந்த வேலைகளையும் AI காலி செய்து வருவதால் இது போன்ற நடுத்தர வர்க்க மாணவர்களின் நிலை தான் கவலைக்கிடமாக மாறும்.
AI ஒருபுறம் வேலை வாய்ப்புகளை அதிகரித்தாலும்.. மறுபுறம் ஒரு சில வேலை வாய்ப்புகளை குறைக்கத்தான் போகிறது. எனவே மாணவர்கள் அதற்கு ஏற்ப தங்களுடைய ஸ்கில் செட்டை மேம்படுத்திக் கொண்டால் தப்பித்து விடலாம்.


Click it and Unblock the Notifications