அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன் சுவிஸ் நாட்டில் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு செல்லும் பயணத்தின் போது விமானத்தில் ஏற்பட்ட சிறிய மின்சார பிரச்சினை காரணமாக திடிரென திரும்பி வந்தது. செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட விமானம் ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸுக்கு திரும்பியது. இது அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு விமான தளம்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை ரேபிட் ரெஸ்பான்ஸ் குழு சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலில் "அபாயத்தை தவிர்க்கும் நோக்கில் ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸுக்கு திரும்புகிறது. அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய குழு வேறு விமானத்தில் டாவோஸ் செல்லும்" என்று உறுதிப்படுத்தியது.

இதுக்குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான குழுவினர் விமானத்தில் சிறிய மின்சார பிரச்சினையை கண்டறிந்தனர். அபாயத்தை தவிர்க்கும் நோக்கில் விமானம் திரும்பியது. டிரம்ப் வேறு விமானத்தில் பயணத்தைத் தொடர்வார் என்றார். இதனால் டாவோஸ் பயணம் தொடர்கிறது.
அமெரிக்க அரசு ஏர் ஃபோர்ஸ் ஒன் என இரு போயிங் விமானங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் வைத்துள்ளது. தற்போது ஒரு விமானம் கோளாறு காரணமாக அமெரிக்காவில் தரையிறக்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானத்தில் டாவோஸ் செல்கிறார் டிரம்ப்.
சமீபத்தில் தான் ஈரான் தரப்பில் டிரம்ப்-க்கு மிரட்டல் விடுக்கப்பட்டது, ஈரான் படையின் செய்திதொடர்பாளரான Abolfazl Shekarchi எங்கள் தலைவர் மீது ஏதேனும் தாக்குதல் நடத்த திட்டமிட்டால் டிரம்ப்-ன் கையை வெட்டி விடுவோம் என்பது அவருக்கு தெரியும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து டிரம்ப்-ம், ஈரான் என்னை கொலை செய்துவிட்டால், பூமியில் இருந்து ஈரானை அழித்துவிட வேண்டும் என்பதற்கு தெளிவான வழிமுறைகளை கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் தான் டிரம்ப் டாவோஸ் செல்லும் விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டு உள்ளது.
இத்தகைய சம்பவங்கள் உண்மையில் தொடர்பு இல்லாவிட்டாலும், உலக நாடுகள் மத்தியிலும், முதலீட்டு சந்தையிலும் பதற்றம் உருவாகிறது. ஏற்கனவே செவ்வாய்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மோசமான சரிவை பதிவு செய்து ஒட்டுமொத்த ஆடிய சந்தையை இன்று கலங்கடித்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் மிரட்டலுக்கு ஏற்ப டிரம்ப் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!



Click it and Unblock the Notifications