இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம், JRD டாடா நிர்வாக காலத்திற்கு பின்பு மீண்டும் விமான சேவைத்துறையில் இறங்க மத்திய அரசின் ஏர் இந்தியா குழுமத்தைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். இதை கைப்பற்றிய பின்பு, ஏற்கனவே டாடா குழுமத்தில் இருந்த 2 விமான நிறுவனத்தையும் சேர்த்து மொத்தம் 4 நிறுவனங்களை இயக்கி வருகிறது.
4 தனி தனி விமான நிறுவனங்களை இயக்குவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் டாடா குழுமம் தனது விமான சேவை வர்த்தகத்தை எளிமைப்படுத்துவதற்காக, கடந்த சில ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வந்த நான்கு விமான நிறுவனங்களை இரண்டாக இணைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய படியை கடந்துள்ளது.

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இந்த நான்கு விமான நிறுவனங்களையும் டாடா குழுமம் இயக்கி வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) அனைத்து விமான நிறுவனங்களின் அனைத்து முக்கிய செயல்பாடுகளின் இயக்க நடைமுறைகளை ஒரே மாதிரியாக மாற்றி மாபெரும் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் இந்த இணைப்பின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்ஆசியா இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டு, குறைந்த விலை விமான சேவையை வழங்கும் நிறுவனமாக மாற்றப்படும். அதே சமயம், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகியவை இணைந்து முழு சேவை நிறுவனமாக இயங்கும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் இந்த இணைப்பு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இணைக்கப்பட்ட டாடா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சுமார் 25.1% பங்குகளை வைத்துள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு மூலம் டாடா குழுமம் தனது விமான சேவையில் பெரும் செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல் முக்கியமான வழித்தடத்தில் அதிக விமானங்களை இயக்கி லாபத்தை நோக்கி பயணிக்க முடியும். இதைவிட முக்கியமான விமான பணியாளர்களை திறம்பட பயன்படுத்த முடியும்.
கடந்த 18 மாதங்களாக, 100க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்து, பொதுவான இயக்க நடைமுறைகளை நிறுவ பணியாற்றியுள்ளனர். இந்த முயற்சியின் பயனாக, இரண்டு தனித்தனி கையேடு உருவாக்கப்பட்டு உள்ளது. ஒன்று முழு சேவை விமான நிறுவனங்களுக்காகவும், மற்றொன்று குறைந்த செலவு விமான நிறுவனங்களுக்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
"டாடா குழும விமான நிறுவனங்களின் இணைப்பு செயல்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த இணைப்பு செயல்பாட்டிற்கான அனுமதிகளை விரைவாக வழங்கிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்" என்று ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பெல் வில்சன் தெரிவித்தார்.
டாடா குழுமம் தனது விமான நிறுவன வர்த்தகத்தை விரைவாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று இலக்கு கொண்டு கடந்த 2 வருடங்களாக இயங்கி வந்தது. இந்த நிலையில் 2023 நிதியாண்டில் டாடா விமான போக்குவரத்து துறை சுமார் ரூ.15,532 கோடி இழப்பை சந்தித்தது. இந்த வர்த்தகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சேவைகள் மேம்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்த முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications