இந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா பயணிகளை ஈர்ப்பதற்காக விமான பயண டிக்கெட்டுகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு என பிரத்தியேக கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பயணத்திற்கு பயணிகள் குறைந்தபட்சம் 1,199 ரூபாயில் இருந்தே பயணிக்கலாம். அதே போல சர்வதேச பயணங்களில் ரவுண்ட் டிரிப்புக்கே குறைந்தபட்சம் 11,969 ரூபாயிலிருந்து பயணம் செய்ய முடியும் என ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, மே 25ஆம் தேதி அன்று இரவு 11:59 மணி வரை இந்த தள்ளுபடிகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே குறைந்த டிக்கெட் கட்டணத்தில் விமான பயணம் செய்ய விரும்பியவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் நேரடியாக ஏர் இந்தியாவின் இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம், அல்லது கவுண்ட்டர்களில் சென்று டிக்கெட் புக் செய்து இந்த கட்டண சலுகைகளை பெறலாம். குறிப்பாக ஏர் இந்தியாவின் இணையதளம், செயலி வாயிலாக புக் செய்தால் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது தவிர FLYAI என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தி ஒவ்வொரு வாடிக்கையாளரும் கூடுதலாக தலா 3 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்தி ஏர் இந்தியா இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட UPIPROMO மற்றும் NBPROMO ஆகிய ப்ரோமோ கோடுகளை பயன்படுத்தி 2500 ரூபாய் வரை தள்ளுபடிகளை பெற முடியும் .
ஏர் இந்தியா நிறுவனம் இடைநில்லாமல் பயணம் செய்யும் விமானங்களில் prepaid baggage சேவைக்கு 40 சதவீத தள்ளுபடியும், இருக்கை தேர்வு செய்வதற்கு சுமார் 20% வரையும் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏர் இந்தியாவில் டிக்கெட் புக் செய்ய எச்எஸ்பிசி சேவை பயன்படுத்தினால் 8000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.
எக்கனாமி, பிரீமியம், பிஸ்னஸ் கிளாஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கும் இந்த சலுகை கிடைக்கும். செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த தள்ளுபடியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு கிடைக்கும் ஆனால் மே 25ஆம் தேதிக்குள் இந்த முன்பதிவினை செய்து கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட வழித்தடங்களில் டிசம்பர் 10ஆம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications