இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ள டாடா குழுமம் ஏர் இந்தியா கைப்பற்றி வர்த்தகம் மற்றும் ஊழியர்களைச் சீர்படுத்தப்பட்ட பின்பு தனது கனவு திட்டத்தை நினைவாக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டேலெஸ் கீழ் தான் ஏர் இந்தியா உள்ளது, ஆனால் டாடா-விடம் ஏர் இந்தியா இல்லாமல் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரு நிறுவனங்கள் உள்ளது.
இந்த 3 நிறுவனத்தையும் இணைக்கும் பட்சத்தில் டாடா குழுமம் உள்நாட்டு விமானச் சேவை முதல் வெளிநாட்டு விமானச் சேவை வரையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க முடியும்.
இக்கனவு திட்டத்தின் முதல் கட்ட பணிகளைத் தற்போது துவங்கியுள்ளது.
ஏர் ஏசியா நிறுவனம்
இந்தியாவில் இயங்கி வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் டாடா குழுமத்தின் கூட்டணியில் இயஹ்கி வருகிறது. இந்த நிலையில் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் மலேசியாவின் ஏர் ஏசியா வைத்திருந்த பங்குகளை ஏர் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.
ஏர் இந்தியா
இதன் மூலம் ஏர் ஏசியா இந்தியாவின் வர்த்தகம் ஆப்ரேஷன்ஸ் என அனைத்தையும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஏர் இந்தியா சேவை மற்றும் வர்த்தகத்தைப் பல வகையில் மேம்படுத்தும், குறிப்பாகச் சேவை அளிக்கும் ஊர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மலேசியாவின் ஏர் ஏசியா
கொரோனா தொற்றுக்குப் பின்பு மலேசியாவின் ஏர் ஏசியா-வின் வர்த்தகமும், நிதி நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏர் ஏசியா தனது வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்து வலிமையாக்க முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக ASEAN பகுதி வர்த்தகத்தை மட்டும் அதிகளவில் கவனம் செலுத்தி தனது வர்த்தக ஆதிக்கத்தை மேம்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
போ லிங்கம்
2014ல் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கியதில் இருந்து ஏர் இந்தியா இந்தியாவில் சிறப்பான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. டாடா குழுமத்துடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது என் ஏர்ஏசியா ஏவியஷன் குரூப்-ன் சிஇஓ போ லிங்கம் தெரிவித்தார்.
16.33 சதவீத பங்குகள்
இந்த விற்பனையில் மலேசியாவின் ஏர் ஏசியா, ஏர் ஏசியா இந்தியா-வில் வைத்திருந்த 16.33 சதவீத பங்குகளை ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. ஏர் ஏசியா இந்தியா விற்பனை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பங்கு விற்பனை முடிந்துள்ளது.
ஐந்தாவது பெரிய நிறுவனம்
ஏர் ஏசியா இந்தியா இந்தியாவின் ஐந்தாவது பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருந்தது, மொத்த விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏர் ஏசியா இந்தியா பங்கு 5.7 சதவிகிதம். தற்போது டாடா குழுமத்தின் ஏர் இந்தியா இப்பங்குகளைக் கையகப்படுத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம், நாட்டின் உள்நாட்டுப் பயணிகள் சந்தையில் 15.7 சதவிகித பங்கைக் கொண்டிருக்கும்.
இண்டிகோ
ஆனாலும் இண்டிகோ 56.2 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாக உள்ளது. இந்தியா முழுவதும் ஓரே நாளில் 75க்கும் அதிகமான இந்திய பயணிகள் போக்குவரத்து விமானங்கள் பராமரிப்பு மற்றும் என்ஜின் தொடர்பான பிரச்சனைகள் காரணமாகத் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான CAPA செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications