டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 60 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். கிறிஸ்துமஸ் , ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவை வர இருக்கும் நிலையில் ஏராளமானவர்கள் இந்தியா அமெரிக்கா இடையே பயணம் செய்யும் காலம் இது. இந்த சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனம் திடீரென 60 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது. பராமரிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட தங்களுடைய விமானங்கள் தாமதமாக வந்து சேர்வது, மேலும் விமான பாகங்கள் போதிய அளவில் கிடைக்காமல் இருப்பது ஆகியவையே 60 விமானங்களின் சேவைகளை ரத்து செய்வதற்கு காரணம் என ஏர் இந்தியா கூறியுள்ளது.
இதனால் நவம்பர் மாதம் மத்தியில் மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து தடைபட இருக்கிறது. குறிப்பாக டெல்லியில் இருந்து சிகாகோ, டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ ,டெல்லியில் இருந்து வாஷிங்டன் ,மும்பையில் இருந்து நியூயார்க் ஆகிய வழித்தடங்களில் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகங்களுக்கு பயணிகள் தங்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விவரங்கள் :
டெல்லி-சிகாகோ (AI126): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்
சிகாகோ-டெல்லி (AI127): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்
டெல்லி- நியூயார்க் (AI105/AI106): 5 டிசம்பர்
டெல்லி- சான் பிரான்சிஸ்கோ (AI173/AI174): 15, 18, 26 நவம்பர்; 2, 9, 13 டிசம்பர்
டெல்லி- வாஷிங்டன் (AI103/AI104) 16 நவம்பர் - 31 டிசம்பர்
மும்பை - நியூயார்க் (AI119/AI116): 19 நவம்பர், 9 டிசம்பர்
மேலும் இந்த விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் தங்களுடைய பயண தேதியை மாற்றி அன்றைய தினத்தில் இயங்கும் விமானங்களில் பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் கூட்டாண்மையோடு இயங்கும் நிறுவனங்களில் பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயண தேதியை மாற்ற விரும்பாத பயணிகளுக்கு முழுமையான டிக்கெட் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் நிலைமை சீராக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications