இந்திய விமானப் போக்குவரத்தை தலைகீழாக மாற்ற திட்டமிட்டு வரும் ஏர் இந்தியா, இதுவரையில் எந்தொரு விமான நிறுவனமும் செய்திடாத வகையில் 470 விமானங்களை ஆர்டர் செய்தது. உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது ஏர் இந்தியா 470 விமானங்களை அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது.
இந்த ஆர்டர் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வேலைவாய்ப்பு, வர்த்தகம், வருமானம், பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதனால் இரு நாட்டு அதிபர்களும் ஏர் இந்தியாவைப் புகழ்ந்து தள்ளுவது மட்டும் அல்லாமல் இரு நிறுவனங்களின் சிஇஓ-வும் ஏர் இந்தியா வியப்பளிக்கும் ஆர்டர் மற்றும் வாய்ப்புக்கு நன்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏர் இந்தியா வாங்கிய 470 விமானங்களின் பில் வந்துள்ளது மட்டும் அல்லாமல் இதை எப்படி டாடா குழுமம் செலுத்தப் போகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா
டாடா குழுமத்தின் முக்கியப் போக்குவர்த்தகமாக இருக்கும் ஏர் இந்தியாவின் சிஇஓ-வான கேம்பிள் வில்சன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது ஏர் இந்தியா நிர்வாகம் ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளது.
470 விமானங்கள்
இந்தப் புதிய 470 விமானங்களின் மொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர், ஏர் இந்தியாவுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை கொடுத்துள்ளது அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பிய ஏர்பஸ். இல்லையெனில் இந்த 470 விமானங்களின் பில் 100 பில்லியன் டாலரை தாண்டியிருக்கும்.
70 பில்லியன் டாலர் பில்
இந்த 70 பில்லியன் டாலர் தொகையை டாடா குழுமம் தனது உள்நிதி பணபுழக்கம், பங்குகள், விமானங்கள் விற்பனை மற்றும் குத்தகை ஆகியவற்றின் மூலம் வரும் நிதியை வைத்து செலுத்த உள்ளதாக ஏர் இந்தியாவின் சிஇஓ-வான கேம்பிள் வில்சன் தெரிவித்துள்ளார். சரி ஏர் இந்தியா ஓரே நேரத்தில் 470 விமானங்களை ஆர்டர் செய்ய என்ன காரணம்..? 70 பில்லியன் டாலர் முதலீடு செய்து லாபத்தைப் பார்க்க முடியுமா..?
இந்தியா 3வது இடம்
உலக நாடுகளில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையைக் கொண்டு உள்ளது இந்தியா தான். ஆனால் சரியான முறையில் விரிவாக்கம் செய்யாமலும், முதலீடு செய்யாமல் இருக்கும் காரணத்தால் இதன் வெற்றி சுவையை இதுவரையில் யாரும் ரூசிக்க முடியாமல் உள்ளனர்.
144 மில்லியன் பயணிகள்
2019ல் அதாவது கோவிட்-க்கு முந்தைய ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 144 மில்லியன் பயணிகளைக் கொண்டு இந்தியா மாஸ் காட்டியது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 3-4% மட்டுமே விமானப் பயணத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் வாய்ப்புகள் அதிகம்
இளம் தலைமுறையினர் மத்தியில் வருமானம், வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நடுத்தர மக்களின் வலிமையான வளர்ச்சி, குறைந்த கட்டண விமானச் சேவை அளிக்க விமான நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் கடுமையான போட்டி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் விமானப் போக்குவரத்து பெரிய அளவில் மேம்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மத்திய மாநில அரசுகள்
இதேவேளையில் மத்திய மாநில அரசுகளும், தொழில்துறையும், உலகிலேயே இந்தியா மூன்றாவது பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையாக மாறக்கூடும் என்று கூறுகின்றனர். இதற்காகப் பல விரிவாக்க பணிகளையும், முதலீடுகளையும் செய்து வருகின்றனர்.இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் காரணத்தால் உள்நாட்டு விமானச் சேவையும் கட்டாயம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதுதான் காரணம்
இந்த நிலையில் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தை வர்த்தகத்திற்கும், தற்போதைய விமான எண்ணிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டு உள்ளது. இதை நிரப்பும் விதமாக ஏர் இந்தியா மட்டும் அல்லாமல் நாட்டின் பிற விமானச் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான விமானங்களை ஆர்டர் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications