அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்து 242 பேரின் குடும்பங்களையும் பாதிக்க செய்திருக்கிறது. ஒவ்வொருவரின் பின்னாலும் வலி மிகுந்த பல கதைகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
விமான விபத்து: அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. போயிங் 787 ட்ரீம் லைனர் வகையிலான இந்த விமானம் குஜராத்தில் அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு வழியில் எங்கேயும் நிற்காமல் நேரடியாக லண்டனை சென்றடைவதாக தான் இருந்தது. பத்து மணி நேர பயணமாக இது இருந்திருக்க வேண்டும். நம்பிக்கைகளோடும் கனவுகளோடும் தொடங்கப்பட்ட இந்த பயணம் பலரின் வாழ்க்கைக்கும் முடிவுரை எழுதுவதாக மாறி இருக்கிறது.

லண்டன் புறப்பட்ட புதுமணப்பெண்:விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களையும் கண் கலங்க வைக்கின்றன. தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது பலரும் கதறி அழும் காட்சிகள் கண்களில் இருந்து நீங்க மறுக்கின்றன. தன்னுடைய கணவரை சந்திப்பதற்காக பல்வேறு ஆசைகளுடனும் கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை இந்த விமான விபத்தின் மூலம் முடிவடைந்து இருக்கிறது.
ஜனவரியில் தான் திருமணம் நடந்தது: ராஜஸ்தான் மாநிலம் பலோதரா மாவட்டத்தை சேர்ந்த அரபா என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தான் குஷ்பூ ராஜ் புரோஹித். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் மன்ஃபூல் சிங் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. மன்ஃபூல் சிங் லண்டனில் இருக்கும் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு அவர் லண்டனுக்கு படிப்புக்காக சென்று விட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் இறப்பு: இந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக குஷ்பூ ராஜ் புரோஹித் ஏர் இந்தியா விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவருடைய ஆசை, கனவு அனைத்துமே இந்த விபத்தோடு சேர்ந்து நொறுங்கி விட்டது. இந்த விமான விபத்தில் மட்டும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் குஷ்பூ ராஜ் புரோஹித்தும் ஒருவர். இந்த விமான விபத்தில் உயிரிழந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்ற இரண்டு பேர் லண்டனில் சமையல் கலைஞராக பணி புரிவதற்காக சென்று இருக்கிறார்கள். அதேபோல ஒரு தந்தையும் மகளும் வர்த்தக நோக்கத்திற்காக இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
அகமதாபாத்தில் இருந்து விமானம் புறப்பட்டு 825 அடி உயரத்தை எட்டிய பிறகு திடீரென கீழே விழுந்து நொறுங்கி இருக்கிறது. ஒரு மருத்துவ கல்லூரியின் விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் அங்கே இருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் காயமடைந்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications