அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்படும்போது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அகமதாபாத் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் (NSCBI) இருந்து மாலை 1:49 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E-318, அகமதாபாத் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் 179 பயணிகள் இருந்தனர் மற்றும் ஸ்டாண்ட் எண் 53 இலிருந்து புறப்பட்டது. ஆனால், அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டதால், விமானம் மாலை 2:52 மணிக்கு மீண்டும் கொல்கத்தாவிற்கு திருப்பி பாதுகாப்பாக விமான தரையிறக்கப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) செய்திதொடர்பாளர் கொல்கத்தாவில் PTI செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இண்டிகோ விமானம் 6E-318, அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டதால், புறப்பட்ட பிறகு கொல்கத்தாவிற்கு திரும்பியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஏர் இந்தியா விமான விபத்தும், அகமதாபாத் விமான நிலையத்தை மூடப்பட்டதாலும் இண்டிகோ உள்ளிட்ட அனைத்து விமான விமானம் விமானங்களின் பயண அட்டவணைகள் பாதிக்கப்பட்டன.
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சில நொடிகள் வானில் பறந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மேகானி நகர் அருகே நிகழ்ந்த. இதனால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அகமதாபாத் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது.
AI 171 என்ற ஏர் இந்தியா விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது. இந்த போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், 1 கனடியர் மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு தகவல் வழங்க 1800 5691 444 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications