அகமதாபாத்தில் 247 பயணிகளோடு சென்ற ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளாகி இருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம் லைனர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
ஏர் இந்தியா விமான விபத்து: லண்டனுக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் நண்பகல் 1. 39 மணியளவில் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 242 பயணிகளும் 2 விமானிங்களும் 10 விமான பணியாளர்களும் இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. விமான நிறுவனங்கள் மிக கவனமாகவே விமானங்களை இயக்குகின்றன. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பின்னரே விமானம் புறப்படும். இருந்தாலும் அரிதிலும் அரிதாக இது போன்ற விபத்துகள் நிகழ்கின்றன.

பயண காப்பீடு: இப்படி எதிர்பாராமல் நிகழக்கூடிய விமான விபத்துகளின் போது பயண காப்பீடு திட்டங்கள் நமக்கு உறுதுணையாக அமைகின்றன. விமான விபத்துகள் அரிதாக நிகழ்ந்தாலும் இதனால் ஏற்படும் இழப்புகள் மிகப்பெரியதாக இருக்கும். எனவே விமானங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் பயண காப்பீட்டை எடுத்து கொள்ள வேண்டும்.
ஏன் பயண காப்பீடு தேவை: பொதுவாக நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே காப்பீடும் சேர்த்து கொள்ளலாமா என கேட்கும் ஆனால் அது தேவையற்றது என நாம் எடுக்க மாட்டோம். இருந்தாலும் அப்போது காப்பீடுக்காக நாம் செலுத்தும் சிறு தொகை தான் இது போன்ற விபத்து சமயங்களில் நமக்கு பெரும் உதவியாக இருக்கும். அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் பயண காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விமான நிறுவனங்கள் என்ன செய்யும்?: இந்தியாவில் விமான விபத்துகளால் ஏற்படும் இறப்பு அல்லது காயங்களுக்கு மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1999இன் படி விமான சேவை நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும். இதன்படி சிறப்பு உரிமைகள் என்ற அடிப்படையில் விமான நிறுவனம் ஒவ்வொரு பயணிக்கும் இறப்பு அல்லது காயத்திற்கு என தலா 1.4 கோடி ரூபாயை வழங்கும். விமான சேவை நிறுவனத்தின் தவறே விபத்துக்கு காரணம் என்றால் இழப்பீடு தொகை அதிகமானதாக இருக்கும். இது சர்வதேச விமானங்களுக்கு பொருந்தும், உள்நாட்டு விமானங்கள் இந்திய விமான போக்குவரத்து துறையின் விதிமுறைகளின்படி இழப்பீட்டை மாற்றி கொள்ளலாம்.
பயணக் காப்பீடு: விமான விபத்துகள் உயிரிழப்பையும் , மிக தீவிரமான உடல் காயங்களையும் ஏற்படுத்தக் கூடியவை.எனவே விமான விபத்துகளின் போது காப்பீட்டு திட்டங்கள் பின்வருவனவற்றுக்கு காப்பீடு அளிக்கின்றன.
· விபத்தினால் மரணம் , உடல் குறைபாடு
· மருத்துவ காரணங்களுக்காக வெளியேற்றம்
· அவசர தேவைக்காக மருத்துவமனையில் அனுமதி
· விமானம் தாமதம்/ரத்து
· பைகளை இழப்பது
ஆகியவற்றுக்கு காப்பீடு திட்டங்கள் நமக்கு இழப்பீட்டை வழங்குகின்றன. பொதுவாக பயண காப்பீடு வழங்கும் இழப்பீடுகள் இவை தான்:
· விபத்தினால் ஏற்படும் மரண, ரூ.25 லட்சம் முதல் ரூ1. கோடி வரை இழப்பீடு
· நிரந்தர உடல் குறைபாடு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை
· மருத்துவமனை சிகிச்சைக்கான செலவுகள்
இந்த இழப்பீடு தொகைகள் நாம் எடுக்கும் பயண காப்பீடு மற்றும் அதற்காக செலுத்தும் பிரீமியம் தொகையை பொறுத்து மாறுபடும்.
நிதி ரீதியான பாதுகாப்பு: பயணக் காப்பீடு வைத்திருக்கும் நபர் விமான விபத்தில் இறக்கும் போது காப்பீடு மூலம் ஒரு தொகை அவரது குடும்பத்திற்கு செல்லும். ஒரு வேளை வேலைக்கு செல்ல முடியாத அளவு உடல் குறைபாடு ஏற்பட்டாலும் ஒரு கணிசமான தொகை கைக்கு வரும். அந்த சமயத்தில் நிதி ரீதியான அழுத்தங்களுக்கு ஆளாகாமல் சிகிச்சையில் நாம் கவனம், செலுத்தலாம்.
அரசு இழப்பீடு போதாது: இது போன்ற விமான விபத்துகளின் போது அரசு சார்பாகவும் விமான நிறுவனங்கள் சார்பாகவும் இழப்பீடு தொகை வழங்குகப்படும். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட அளவில் தான் இருக்கும். எனவே அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயணக் காப்பீட்டை எடுத்து கொள்வது அவசியம்.இது அவர்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை வழங்கும் .
என்னென்ன கவனிக்க வேண்டும்: எனவே விமானங்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே பயண காப்பீடும் எடுத்து கொள்வது சிறந்தது. இவ்வாறு காப்பீடு எடுக்கும் போது சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் என்னென்ன விஷயங்களுக்கு காப்பீடு கிடைக்கும் எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என கவனிக்க வேண்டும். இறப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கான காப்பீடு வழங்கும் திட்டமாக தேர்வு செய்வது சிறந்தது. நாமினி விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். பாலிசி ஆவணங்களை டிஜிட்டலாக நம் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications