அடுத்தடுத்து விபத்து.. போயிங் விமானம் தான் பிரச்சனையா..?

அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171, 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது இந்திய மக்களை உலுக்கியுள்ளது. இந்த AI 171 விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையை சேர்ந்தது.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள், சமீபத்தில் பல பாதுகாப்பு குறைபாடு சம்பவங்களில் சிக்கியுள்ளன. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட உயர மாற்றம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் முன்பகுதி பாதிப்பு, மற்றும் பல தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சம்பவங்கள், உற்பத்தி தரம் மற்றும் போயிங் விமானங்களின் பராமரிப்பின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

அடுத்தடுத்து விபத்து.. போயிங் விமானம் தான் பிரச்சனையா..?

இங்கிலாந்தின் லண்டன் காட்விக் நோக்கி பிற்பகல் 1:38 மணியளவில் புறப்பட்டு, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகத்தில் மோதி நொறுங்கியது. விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர், இதில் 169 இந்திய குடிமக்கள், 53 பிரித்தானிய குடிமக்கள், 1 கனடிய குடிமகன், மற்றும் 7 போர்ச்சுகீசிய குடிமக்கள் அடங்குவர். விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால் தலைமையில், முதல் அதிகாரி கிளைவ் குண்டருடன், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் இயக்கினர்.

இதுவரையில் இந்த விபத்து பகுதியில் இருந்து சுமார் 204 உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளையில் விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிந்தாக கூறப்படுகிறது, இதோடு விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் ஆகியோரை கணக்கில் எடுத்துக்கொண்டால் பலியானோர் எண்ணிக்கை 300 தொடும் என அச்சம் உள்ளது. அதிகாரப்பூரவ அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த விபத்தில் சிக்கிய போயிங் விமானங்கள் சமீபத்தில் ஏற்படுத்திய விபத்துகளை இப்போது பாப்போம்.

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சம்பவம் (ஜனவரி 24, 2025): ஜனவரி 24, 2025 அன்று, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA613, கோட் டி'ஐவரி மேல் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு இனர்ஷியல் ரெஃபரன்ஸ் யூனிட்கள் (IRU) தோல்வியடைந்ததால் திடீரென விமானம் பறக்கும் உயரம் குறைந்தது. இதனால், விமானம் கடுமையான உயர மாற்றங்களுக்கு உள்ளாகி, 38 பயணிகள் காயமடைந்தனர், இதில் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். விமானி தானியங்கி கட்டுப்பாடு துண்டிக்கப்பட்ட பிறகு, மானுவேலாக விமானத்தை இயக்கி, நைஜீரியாவின் லாகோஸில் பாதுகாப்பாக தரையிறக்கினார். அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த சம்பவத்தை IRU தோல்வியால் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியது.

பிரேசில் - விமானம் திடீரென கீழே விழுந்தது (2025): 2025 ஜூன் மாதம், பிரேசிலில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 787 விமானம் திடீரென உயரம் இழந்து கீழே சென்றதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்ததாக ஆரம்ப தகவல் வெளியாகியுள்ளது

பிரிட்டிஷ் ஏர்வேஸ் முன்பகுதி பாதிப்பு (ஜூன் 18, 2021): ஜூன் 18, 2021 அன்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 787-8 விமானத்தின் முன்பகுதி, தவறான பொறியியல் கோளாறு காரணமாக தரையில் மோதியது. டவுன்லாக் பின் (downlock pin) தவறாக பொருத்தப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் துணை விமானி மற்றும் சரக்கு பணியாளர்கள் லேசான காயமடைந்தனர். இந்த சம்பவம் விபத்து அல்ல என்றாலும், விமானத்தின் பராமரிப்பு தரம் குறித்து கவலைகளை எழுப்பியது.

போயிங் 787-8 விமானங்கள், சமீபத்திய ஆண்டுகளில் பல தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளன. இவற்றில் ஹைட்ராலிக் கசிவு, இறக்கை பகுதி (flap) சிக்கல்கள், மற்றும் அவசர தரையிறக்கங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த சம்பவங்கள் மரணங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும், உற்பத்தி தரம் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து தொடர்ந்து கவலைகளை உருவாக்கியுள்ளன. இத்தகைய சிக்கல்கள், விமானப் பயண பாதுகாப்பு குறித்து உலகளவில் விவாதங்களை தூண்டியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+