ஏர் இந்தியா விபத்து: 242 பயணிகளும் உயிரிழப்பு.. உலக தலைவர்கள் இரங்கல்…

அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெறும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே அகமதாபாத் காவல் துறையினர் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளும் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

ஏர் இந்தியா விமானம் விபத்து: அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று நண்பகல் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் லண்டனை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் அருகில் இருக்கக்கூடிய மெக்நானி நகர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதனை அடுத்து நீண்ட உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

ஏர் இந்தியா விபத்து: 242 பயணிகளும் உயிரிழப்பு.. உலக தலைவர்கள் இரங்கல்…

மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதல்: அங்கே இருந்த மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன . இது ஒரு மாணவர் விடுதி என்றும் கட்டிடத்தின் மீது விமானம் மோதியதற்கான புகைப்படங்களும் வீடியோகளும் வெளியான வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான ஒரு விமான விபத்தாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது.

232 பயணிகளும் இறப்பு: இந்த விமானத்தில் 232 பயணிகளும் 10 விமான பணியாளர்களும் 2 விமானிகளும் இருந்தனர். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஏழு பேர் போர்ச்சுகீஸ் நாட்டை சேர்ந்தவர்கள் ,ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மீட்பு பணிகள் : பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் இந்த விபத்து குறித்து கேட்டு அறிந்திருக்கிறார். மேலும் இரண்டு அமைச்சர்கள் உடனடியாக அகமதாபாத் சென்று மீட்பு பணிகள் முறையாக நடப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச தலைவர்கள் இரங்கல்: இந்த விமான விபத்து தொடர்பாக பல்வேறு சர்வதேச நாட்டு தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். வங்கதேச பிரதமர், பிரான்ஸ் நாட்டில் அதிபர் , ரஷ்ய அதிபர், இத்தாலி பிரதமர் என பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தின் விமானியான சுமீத் சுபர்வால் 8,200க்கும் அதிகமான மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய பணி அனுபவம் கொண்டவராக இருக்கிறார்.

நெஞ்சை பதற வைக்கும் படங்கள்: விமான விபத்து தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி காண்போரை கலங்க வைக்கின்றனர். மீட்பு பணிக்காக இந்திய ராணுவமும் நூற்றுக்கணக்கான வீரர்களை அனுப்பி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இதனிடையே போயிங் நிறுவனம் ஏர் இந்தியா விபத்து குறித்து அறிந்து அறிந்திருப்பதாகவும் உதவி பணிகளுக்காக தங்கள் நிறுவன ஊழியர்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

போயிங் பங்கு மதிப்பு :போயிங் நிறுவனத்தின் ட்ரீம்லைனர் வகை விமானமே விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் ப்ரீ மார்க்கெட் வர்த்தகத்தில் போயிங் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8% வரை சரிவை கண்டது. ஒரு பங்கு மதிப்பு இந்திய மணி நேரப்படி மாலை 6 மணி அளவில் 196 டாலர்கள் என வர்த்தகமானது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+