அகமதாபாத்தின் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2025 ஜூன் 12 அன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171), லண்டனுக்கு செல்லும் தனது பயணத்தை துவங்கி சில நிமிடத்தில் மேகானி நகர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்து, இந்திய விமான வரலாற்றில் மிகப்பெரிய இன்சூரனஸ் கிளைம்-ஐ பதிவு செய்யும் என தெரிய வந்துள்ளது. இந்த விமான விபத்துக்காக ஏர் இந்தியா நிர்வாகம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் என தெரிகிறது.

இந்த 1000 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் என்பது இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த மங்களூர் (2010) மற்றும் கோழிக்கோடு (2020) விமான விபத்துகளின் காப்பீடு கிளைம் விட இரு மடங்கு அதிகமாகும். ஏர் இந்தியா-வை நிர்வாகம் செய்யும் டாடா குழுமம் இந்த விபத்தின் மூலம் நேரடியாகவும்,
விமான சேதம்: விபத்துக்குள்ளான விமானம் (பதிவு எண் VT-ANB), 2013 மாடல் போயிங் 787 ஆகும். இது 2021-ல் 115 மில்லியன் டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டது. தற்போதைய மதிப்பு 670 கோடி ரூபாய் ($80 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் இழப்பீடு: 242 பயணிகள் கொண்ட இந்த விமானத்தில், 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாண்ட்ரீல் ஒப்பந்தம் 1999-ன் படி, ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1.47 கோடி வரை இழப்பீடு வழங்கப்படலாம், இது மொத்தம் ரூ.250-420 கோடி ($30-50 மில்லியன்) ஆகும்.
மூன்றாம் தரப்பு பொறுப்பு: விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதால், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கான இழப்பீடு ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவை அதிகரிக்கும்.
ஏர் இந்தியாவின் காப்பீட்டு ஏற்பாடுகள்: ஏர் இந்தியாவின் மொத்த காப்பீடு ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) மதிப்புடையது, இது 300-க்கும் மேற்பட்ட விமானங்களை உள்ளடக்கியது. டாடா ஏஐஜி 40% பங்குடன் ஏர் இந்தியாவின் முன்னணி காப்பீட்டாளராக உள்ளது. இந்த நிறுவனத்துடன் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களும் ஆதரவு அளிக்கிறது.
மேலும் மொத்த இன்சூரன்ஸ் பாதுகாப்பில் 90% அபாயம் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மறு காப்பீட்டாளர்களுக்கு (AIG, AXA, Allianz) மாற்றப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டாளர்கள் 10% அபாயத்தை மட்டுமே வழங்க உள்ளனர். இதன் மூலம் GIC Re, இந்திய அரசின் மறு காப்பீட்டு நிறுவனம், ரூ.34 கோடி மட்டுமே செலுத்தும்.
மாண்ட்ரீல் ஒப்பந்தம் மற்றும் இழப்பீடு: 1999 மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் படி, விமான பயணிகளின் மரணம் அல்லது காயத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு சிறப்பு உரிமைகள் (SDR- Special Drawing Rights) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 2024 டிசம்பர் 28 முதல், ஒரு பயணிக்கு 151,880 SDRs ($282,497 CAD) வரை இழப்பீடு வழங்கப்படலாம், இது 2019 அளவீட்டை விட 18% அதிகமாகும். ஒவ்வொரு 5 வருடத்திற்கு இழப்பீடு தொகை கணக்கிடப்பட்டு மாற்றப்படும்.
இந்தியாவில், இந்த ஒப்பந்தம் Carriage by Air Act மூலம் அமல்படுத்தப்படுகிறது. மூன்றாம் தரப்பு சேதங்கள் மற்றும் பொதுமக்கள் இழப்புகளுக்கு இந்திய உள்நாட்டு சட்டங்கள் பயன்படுத்தப்படும். இதனால் பல இழப்பீடுகளை டாடா குழுமம் காப்பீட்டு பாதுகாப்பு மூலம் வழங்க உள்ளது.
பிற விமான விபத்துகள்: 2010 மங்களூர் மற்றும் 2020 கோழிக்கோடு விபத்துகளில் மொத்த காப்பீடு செலவு என்று பார்த்தால் ரூ.500-585 கோடி ($60-70 மில்லியன்) ஆகும்.
ஆனால், அகமதாபாத் விபத்து ஒரே நிகழ்வில் காப்பீடு கோரிக்கை இரு மடங்காக உயர்ந்து 1000 கோடி ரூபாயாக நிற்கிறது. இந்த பெரிய இழப்பு, உலகளாவிய விமான காப்பீடு விகிதங்களை உயர்த்தலாம், குறிப்பாக இந்தியாவில், இதுவரை இழப்பு விகிதங்கள் குறைவாக இருந்தன, தற்போது நடந்த விபத்து மூலம் அடுத்த வருடம் முதல் ப்ரீமியம் உயர்த்தப்படலாம்.

ஏர் இந்தியா காப்பீட்டு பிரீமியம்: ஏர் இந்தியா ஆண்டுக்கு $30 மில்லியன் (ரூ.257 கோடி) பிரீமியம் செலுத்தி 300 விமானங்களுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இன்சூரன்ஸ் பாதுக்காப்பை பெற்றுள்ளது. இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று புதுப்பிக்கப்படுகிறது. இதில் 300 விமானம் என்பது விஸ்தாரா இணைப்புக்கு பின்பு இருக்கும் எண்ணிக்கை.
ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்ட பிறகு, டாடா ஏஐஜி முன்னணி காப்பீட்டாளராக மாறியது, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இப்போது ஆதரவு பங்கு வகிக்கிறது. இந்த விபத்து அடுத்த புதுப்பித்தலில் பிரீமியங்களை உயர்த்தலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications