குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது விமானத்தில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்துள்ளனர். விமான விபத்து தொடர்பான காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன.
விமான விபத்து: பொதுவாகவே விமானங்கள் முழுமையான பாதுகாப்பு பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் புறப்படவே அனுமதி வழங்கப்படும். அப்படி இருந்தாலும் சில நேரங்களில் விபத்துகள் நேர்கின்றன. பெரும்பாலான விமான விபத்துக்கள் விமானம் டேக் ஆஃப் எனப்படும் புறப்படும் போதும் அல்லது லேண்டிங் எனப்படும் தரையிறங்கும் போது தான் நிகழ்கின்றன. அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் ஆன பிறகுதான் விபத்தில் சிக்கியிருக்கிறது.

தொழில்நுட்ப காரணம் என்ன?: இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் பொதுவாக இதுபோல விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கு ஒரு முக்கியமான தொழில்நுட்ப காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அது பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
#WATCH | Ahmedabad Plane Crash | Visuals from the doctors' hostel where the London-bound Air India flight crashed. The tail fin of the aircraft seen on the premises. pic.twitter.com/yH2oEKrxPE
— ANI (@ANI) June 12, 2025
lift என்றால் என்ன: ஈர்ப்பு விசைக்கு எதிரான விமானம் மேலே எழும்பி ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்று பறக்க வேண்டும். இப்படி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து தரையில் இருந்து விமானம் மேலே சென்று ஒரு நிலைக்கு வருவதையே lift என அழைக்கிறார்கள். விமானங்கள் இப்படி மேலே எழும்புவதற்கு விமான இறக்கைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. விமானங்களில் இருக்கும் இறக்கைகளின் வடிவமும், காற்றில் விமான நகரும் வேகமும் தான் விமானத்தை தரையில் இருந்து மேலே ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழும்புவதற்கு உதவியாக இருக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் நேரும்போதுதான் விமானங்கள் விபத்தை சந்திக்கின்றன.
Stall என்றால் என்ன?: சில சமயங்களில் விமானம் மேலே எழும்பும்போது திடீரென தன்னுடைய பேலன்ஸை இழக்கும். இந்த நிலையை தான் Stall என அழைக்கிறார்கள். விமானத்தில் முக்கியமான பாகங்களாக இறக்கைகள் தான் இருக்கின்றன . விமானம் தரையில் இருந்து மேலே எழுந்து காற்றில் தக்க வைப்பதற்கு போதுமான விசையை இறக்கைகளே உருவாக்கும். இந்த விசையை உருவாக்க முடியாத போது தான் விமானம் ஸ்டால் எனப்படும் நிலைக்கு வருகிறது.
விமானம் தரையில் இருந்து மேலே எழும் போது மெதுவாக சென்றாலோ அல்லது விமானி மிக வேகமாக விமானத்தை இயக்கி செங்குத்தான நிலைக்கு சென்றாலோ இந்த விமானம் மேலே எழும்பாமல் ஸ்டால் என்ற நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
செங்குத்தாக இயக்குவது: முதலில் விமானத்தை டேக் ஆஃப் செய்யும் போது விமானத்தின் முன் பகுதியை மிக வேகமாக மேல் நோக்கி செல்லும் வகையில் விமானத்தை இயக்கினால் அதன் கோணம் மிகவும் செங்குத்தானதாக மாறும். இது விமான இறக்கைகள் வழியே காற்று பாயும் விதத்தை சீர்குலைக்கும் இதன் காரணமாக விமானங்கள் தன்னுடைய பேலன்ஸை இழக்கும்.
குறைந்த வேகம்: தரையில் இருந்து விமானம் மேலே சென்று ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை விமானத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தான் இயக்க வேண்டும். அப்பொழுதுதான் விமான இறக்கைகளின் வழியே காற்று சென்று விமானம் மேலே எழுந்து காற்றில் பறப்பதற்கு உதவியாக இருக்கும். குறிப்பிட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில் இயக்கினால் விபத்து நேரலாம்.
இறக்கைகளுக்கு செட்டிங் : விமானம் மேலே எழுவதற்கும் வானில் பறப்பதற்கும் இறக்கைகள் தான் முக்கியமான பாகங்களாக இருக்கின்றன. அவற்றுக்கான செட்டிங் சரியான இல்லை என்றால் விபத்து நேரிடும் என சொல்லப்படுகிறது.
என்ஜின் கோளாறு: சில சமயங்களில் விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விமான என்ஜின்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை செயலிழக்கும் போது எதிர்பார்த்த வேகத்தை விமானத்தால் எட்ட முடியாது. என்ஜின் செயல் இழந்தால் விமானம் தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்கும் மேலே எழும்ப முடியாமல் கீழே விழுந்து நொறுங்கும். விமானம் மேலே ஏற முடியாமல் தத்தளிக்கும் சமயத்தில் எதிர் திசையிலான தரையை நோக்கி வரும். அந்த சமயத்தில் தான் விமானத்தின் முன் பக்கம் வேகமாக தரையில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications